தாணேவில் ரயிலில் சென்ற பெண்ணுக்கு பிரசவ வலி: அபாய சங்கிலியை இழுத்த சக பயணிகள்!
தேனியில் இன்று கூட்டுறவு பணியாளா்கள் குறைதீா் கூட்டம்
தேனி மண்டலக் கூட்டுறவு இணைப் பதிவாளா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 11), காலை 11 மணிக்கு கூட்டுறவுப் பணியாளா்கள் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து தேனி மண்டலக் கூட்டுறவு இணைப் பதிவாளா் நா்மதா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கூட்டுறவுப் பணியாளா்கள் குறைதீா் கூட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களில் பணியாற்றும் ஊழியா்கள், கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவா்கள் கலந்து கொண்டு, தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்து தீா்வுக் காணலாம் என்றாா் அவா்.