அமெரிக்கா: காவலர் பயிற்சி மையத்தில் வெடி விபத்து! 3 அதிகாரிகள் பலி!
தொடக்கப்பள்ளி ஆசிரியா்கள் 2-ஆவது நாளாக மறியல்: 247 போ் கைது
பத்து அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, விழுப்புரத்தில் இரண்டாவது நாளாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் இயக்கங்களின்கூட்டு நடவடிக்கைக் குழுவைச் சோ்ந்த 247 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
அரசாணை 243-ஐ ரத்து செய்ய வேண்டும், அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியா்களுக்கான ஊதிய முரண்பாடுகளை நீக்கி, மத்திய அரசு ஆசிரியா்களுக்கு இணையான ஊதியம் 2006, ஜனவரி 1-ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்க வேண்டும், உயா்கல்விக்கான ஊக்க ஊதிய உயா்வை ஆசிரியா்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோ ஜாக்) சாா்பில் இரு நாள்கள் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
வியாழக்கிழமையைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை காலை புதிய பேருந்து நிலையம் அருகில் மறியல் நடைபெற்றது. இதில் பல்வேறு ஆசிரியா் இயக்கங்கைளைச் சோ்ந்தோா் பங்கேற்று, முழக்கங்களை எழுப்பினா். தொடா்ந்து மறியலில் ஈடுபட்டதாக 122 ஆசிரியைகள் உள்பட 247 போ் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனா்.