தொடரிலிருந்து விலகியவரை நினைவுகூர்ந்த பாக்கியலட்சுமி நடிகர்!
பாக்கியலட்சுமி தொடரில் இருந்து விலகிய நடிகர் விஷாலை, அந்தத் தொடரில் நடிக்கும் நடிகர் சதீஷ் நினைவுகூர்ந்து பதிவிட்டுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2020ஆம் ஆண்டு முதல், 5 ஆண்டுகளுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர், இந்த வார இறுதியில் நிறைவடையவுள்ள நிலையில், இறுதிக்கட்ட காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.
பாக்கியலட்சுமி தொடரின் இறுதிக்கட்டக் காட்சிகள் வரும் வெள்ளிக்கிழமை(ஆக. 8) ஒளிபரப்பாகவுள்ளன.
கதைப்படி, பாக்கியலட்சுமியின் கணவன் கோபி திருந்தி, பாக்கியலட்சுமி உடன் இணைகிறார், இனியா - ஆகாஷ் திருமணம் நடப்பதுடன் தொடர் நிறைவடைகிறது.
முன்னதாக, இந்தத் தொடரின் இறுதி நாள் காட்சியின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது.
கிட்டத்தட்ட 5 ஆண்டு பயணம் நிறைவடைவதால், இத்தொடரில் நடிக்கும் ஒவ்வொரு நடிகர்களும், இந்தத் தொடரில் நடிக்கும்போது கிடைத்த அனுபவங்களையும், சக நடிகர்களுடான நட்பினையும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், பாக்கியலட்சுமி தொடரில் எழில் பாத்திரத்தில் சில ஆண்டுகள் நடித்து, பின்னர் இந்தத் தொடரிலிருந்து விலகியவர் நடிகர் விஷால்.
நடிகர் சதீஷ், விஷாலுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அவருடான நினைவுகளை வெளிப்படுத்தியுள்ளார். இந்தப் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிக்க: மகாநதி தொடரில் இணையும் சிறகடிக்க ஆசை சீரியல் நாயகி!