செய்திகள் :

தொடர்ந்து குறையும் தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

post image

சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தில் விலை விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.73,200-க்கும் கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.9,150-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில், வெள்ளி விலை எந்தவித மாற்றமுமின்றி, அதே விலையில் நீடிக்கிறது.

கடந்த வாரம் புதன்கிழமை முதல்முறையாக ஒரு சவரன் ரூ.75 ஆயிரத்தைத் தொட்ட தங்கம் விலை அதன்பின்னர் ஒருவாரமாக இறங்குமுகத்தில் உள்ளது.

வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.1,000 குறைந்து ரூ.74,040-க்கும், வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.360 குறைந்து ரூ.73,680-க்கும், சனிக்கிழமை பவுனுக்கு ரூ.400 குறைந்து ரூ.73,280-க்கும், திங்கள் கிழமை மாற்றமின்றியும் விற்பனையானது.

தொடர்ந்து 4-வது நாளாக இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.73,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Gold price Today

இதையும் படிக்க :‘ஆபரேஷன் சிந்தூர்’: மக்களவையில் இன்று உரையாற்றுகிறார் பிரதமர் மோடி!

ஏசியன் பெயிண்ட்ஸ் முதல் காலாண்டு லாபம் 6% சரிவு!

புதுதில்லி: ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 5.87 சதவிகிதம் குறைந்து ரூ.1,117.05 கோடியாக இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. அலங்கார பெயிண்டிற்கான தேவை குறைந்ததே இதற்குக் முக்கிய... மேலும் பார்க்க

2025ல் இந்தியாவிற்கான பாமாயில் ஏற்றுமதி 5 மில்லியன் டன்னாக இருக்கும்: இந்தோனேசியா

புதுதில்லி: இறக்குமதி வரிகளைக் குறைக்க இந்தியா முடிவு செய்ததையடுத்து 2024ஆம் ஆண்டில் 4.8 மில்லியன் டன்களிலிருந்து 2025ஆம் ஆண்டு பாமாயில் ஏற்றுமதி 5 மில்லியன் டன்னுக்கு அதிகமாக இருக்கும் என மூத்த தொழில... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் சரிந்து ரூ.86.82 ஆக நிறைவு!

மும்பை: எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் இறக்குமதியாளர்களுக்கு டாலர் தேவை அதிகரித்ததால் இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 12 காசுகள் சரிந்து ரூ.86.82 ஆக நிறைவடைந்தது. இந்... மேலும் பார்க்க

3 நாள் சரிவுக்குப் பிறகு மீண்ட பங்குச் சந்தை; சென்செக்ஸ் 447 புள்ளிகள் உயர்வு!

மும்பை: ப்ளூ-சிப் பங்குகளான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கியின் பங்குகள் ஏற்றத்தால், மூன்று நாள் சரிவு முடிவடைந்து பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி மீண்டன.இன்றைய கா... மேலும் பார்க்க

அமேசான் சுதந்திர தின சலுகை ஜூலை 31 முதல் தொடக்கம்! என்னென்ன வாங்கலாம்?

இணைய விற்பனை தளமான அமேசானில் சுதந்திர தினத்தையொட்டிய சலுகைகள் ஜூலை 31ஆம் தேதி முதல் தொடங்குகின்றன. கடந்த மாதம், பிரைம் பயனர்களுக்காக மட்டுமே சலுகைகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அனைத்து தரப... மேலும் பார்க்க

நீருக்குள் கூட புகைப்படம் எடுக்கலாம்: ஆக. 4-ல் அறிமுகமாகிறது விவோ ஒய் 400!

விவோ நிறுவனம் ஒய் 400 5ஜி என்ற புதிய ஸ்மார்ட்போனை ஆகஸ்ட் 4 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. அறிமுக தேதி அறிவிக்கப்பட்டதையொட்டி, புதிய ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்த தகவலும் வெளியாகிய... மேலும் பார்க்க