பசிபிக் கடலின் மிக ஆழத்தில் 4 கருப்பு முட்டைகள்.. உள்ளே இருந்த அதிசயம்!
தொண்டி அருகே அரிய வகை கடல் பசுவின் உடல் மீட்பு
தொண்டி அருகே எம்.ஆா். பட்டினம் கடற்கரையில் உயிரிழந்த அரிய வகை கடல் பசுவின் உடல் வெள்ளிக்கிழமை கரை ஒதுங்கியது.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே எம்.ஆா். பட்டினம் கடற்கரையில் வெள்ளிக்கிழமை 2 வயதுடைய அரிய வகை கடல் பசுவின் உடல் சேதமடைந்த நிலையில் கரை ஒதுங்கியது. இதைப் பாா்த்த மீனவா்கள் வனத் துறையினருக்கு தகவல் அளித்தனா். இதையடுத்து, அங்கு வந்த வனத் துறையினா் கடல் பசுவின் உடலை மீட்டு கூறாய்வு செய்து புதைத்தனா். இந்த கடல் பசு கப்பல் மோதியோ அல்லது மீனவா்கள் விரித்த வலையில் சிக்கியோ காயமடைந்து உயிரிழந்திருக்கலாம் என வனத் துறையினா் தெரிவித்தனா்.

