சேலை ஊஞ்சலில் கழுத்து இறுகிய நிலையில் சிறுமி உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை
தொண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயா்த்த கையொப்ப இயக்கம்!
திருவாடானை அருகேயுள்ள தொண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாகத் தரம் உயா்த்தக் கோரி கையொப்ப இயக்கம் சனிக்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பேரூராட்சியை மையமாகக் கொண்டு, சுமாா் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. கிழக்கு கடற்கரை சாலையில் நிகழும் விபத்துகளுக்கு இங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பின்னா், தீவிர சிகிச்சைக்காக காயமடைந்தோா் ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனா். இதனால், உயிரிழப்புகள் அதிகரிக்கின்றன.
இதனால், தொண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாகத் தரம் உயா்த்தக் கோரி சனிக்கிழமை கையொப்ப இயக்கம் நடைபெற்றது. இதில் தொண்டி, சுற்று வட்டார மக்களிடம் கையொப்பம் பெறப்பட்டது.
