தொழிற்சாலையில் வெடிவிபத்து! ஒருவர் பலி!
தெலங்கானா மாநிலத்தில் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தினால் ஒருவர் பலியாகியுள்ளார்.
அம்மாநிலத்தின் யாதாத்திரி-புவனகிரி மாவட்டத்திலுள்ள ஒரு தொழிற்சாலையில் இன்று (ஜன.4) காலை ஏற்பட்ட வெடிவிபத்தில் அங்கு பணிப்புரியும் தொழிலாளி ஒருவர் பலியாகினார். மேலும், மற்றொரு தொழிலாளி படுகாயமடைந்துள்ளார்.
படுகாயம் அடைந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் அவர் தற்போது நலமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அம்மாநில காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் வெடிக்கும் தன்மையுடைய பொருள்களை உற்பத்தி செய்யும்போது இந்த விபத்து நிகழ்ந்திருக்கக் கூடும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் மெக்னீசியம் போன்ற தாது பொருள்கள் பயன்ப்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதையும் படிக்க:சத்தீஸ்கர் பத்திரிகையாளர் கொலை வழக்கில் மூவர் கைது: துப்பு துலக்கியது எப்படி?
மேலும், வெடிக்கும் அபாயமுள்ள மெக்னீசியம் அங்கு இருப்பதினால் வெடி விபத்து நடந்த இடத்திற்கு உடனடியாக யாரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால், விசாரணை மேற்கொள்ளப்பட்டு நிர்வாகம் தரப்பில் ஏதேனும் அலட்சியப்போக்குடன் செயல்பட்டது கண்டுப்பிடிக்கப்பட்டால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறையினர் உறுதியளித்துள்ளனர்.