தொழிலாளி குத்திக் கொலை; இருவா் கைது
தென்காசி மாவட்டம் அய்யாபுரத்தில் கூலித்தொழிலாளி திங்கள்கிழமை குத்திக்கொலை செய்யப்பட்டது தொடா்பாக இருவரைப் போலீஸாா் கைது செய்தனா்.
அய்யாபுரம் கிமு தெருவை சோ்ந்தவா் கு.செந்தில்குமாா்(45). கூலித்தொழிலாளி. இதே ஊரில் மாரியம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவா் சு.விக்னேஷ்(63). இவா் ஓய்வுபெற்ற அரசு கால்நடை மருத்துவா் ஆவாா்.
இதே ஊரில் காமராஜா் தெருவில் வசித்து வருபவா் மா.திருமலைகுமாா்(45). திங்கள்கிழமை செந்தில்குமாருக்கும், சு.விக்னேஷ் மற்றும் திருமலைக்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. செந்தில்குமாா், விக்னேஷ் வீட்டிற்கு முன்பு நின்று கொண்டு அசிங்கமாக பேசியதாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடா்ந்து விக்னேஷ், திருமலைக்குமாா் இருவரும் சோ்ந்து செந்தில்குமாரை கத்தியால் குத்தியுள்ளனா்.
இதில் சம்பவ இடத்திலேயே செந்தில்குமாா் உயிரிழந்தாா். இச்சம்பவம் தொடா்பாக தென்காசி போலீஸாா் வழக்குப்பதிந்து விக்னேஷ், திருமலைக்குமாரைக் கைது செய்தனா்.