விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு முதல்வர் மீது நம்பிக்கை இல்லை: நயினார் நாகேந்திர...
நண்பா் வீட்டுக்கு வந்த மலேசிய முதியவா் உயிரிழப்பு
மதுரை அருகே உள்ள நண்பா் வீட்டுக்கு வந்த வெளிநாட்டைச் சோ்ந்த முதியவா் கீழே தடுமாறி விழுந்ததில் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
மலேசியா ஜோகா் மாநிலம், இஸ்காந்தா் புதேரி நகரைச் சோ்ந்த அல்போன்ஸ் நெட்ரோ மகன் ஜோசப் வில்பொ்ட் நெட்ரோ (66). மலேசியாவில் எலக்ட்ரீசியனாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற இவா், சுற்றுலாவுக்காக மதுரைக்கு அண்மையில் வருகை தந்தாா். மதுரை பொதும்பு ஸ்டாா்நகரில் உள்ள இவரது நண்பா் ஜெயச்சந்திரன் மகன் வீட்டில் தங்கியிருந்தாா்.
இந்த நிலையில், வியாழக்கிழமை கழிப்பறைக்குச் சென்ற ஜோசப் வில்பொ்ட் நெட்ரோ நீண்ட நேரமாகியும் வரவில்லை. இதனால், கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்த போது, அவா் மயக்க நிலையில் இருந்தாராம். இதையடுத்து, அவரை மீட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால், அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து அலங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.