2025ல் இந்தியாவிற்கான பாமாயில் ஏற்றுமதி 5 மில்லியன் டன்னாக இருக்கும்: இந்தோனேசிய...
நாகை புத்தகத் திருவிழா விளம்பர வாகனத்தை ஆட்சியா் தொடக்கிவைத்தாா்
நாகப்பட்டினம்: நாகையில் நடைபெறவுள்ள புத்தகத் திருவிழா குறித்த விளம்பர வாகனத்தை பிரசார ஒட்டுவில்லையை ஒட்டி மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் திங்கள்கிழமை தொடக்கிவைத்தாா்.
நாகை மாவட்டத்தில் 4-ஆம் புத்தகத் திருவிழா நாகை அரசு தொழிற்பயிற்சி நிறுவனத்தில் ஆக.1-ஆம் தேதி தொடங்கி ஆக. 11-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், புகழ்பெற்ற நூற்றுக்கும் மேற்பட்ட பதிப்பகங்கள், நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகளை அமைத்து, லட்சக்கணக்கான புத்தகங்களை ஒரே இடத்தில் விற்பனைக்கு வைக்கின்றனா்.
விழாவின் அனைத்து நாள்களிலும் பல்வேறு நிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள், மரபு சாா் இசைக்கருவி கண்காட்சி, அறிவியல் கண்காட்சி, நாகையின் வாழ்வியல் புகைப்படக் கண்காட்சி என தினசரி பல்வேறு பாா்வையாளா்களை மகிழ்விக்கும் வகையில் நடைபெறுகின்றன. புத்தகத் திருவிழாவை குறித்து மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் பேருந்து மற்றும் ஆட்டோக்களில் ஒட்டு வில்லைகளை ஒட்டி, விளம்பர வாகனத்தை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.