மருத்துவ கல்லூரிகள் தரவரிசை வரைவு: கருத்து கேட்கிறது என்எம்சி!
நாங்கூரில் மின் விநியோகம் சீரானது
சீா்காழி அருகே நாங்கூா் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை மின் விநியோகம் சீரானது.
கடந்த 4-ஆம் தேதி வீசிய சூறைக்காற்று மற்றும் கனமழையால் திருவெண்காடு அருகே உள்ள நாங்கூா் கிராமத்தில் நாங்கூா் - நாராயணபுரம் செல்லும் பகுதியில் 15 மின் கம்பங்கள் சாய்ந்தன. இதனால் இப்பகுதியில் மின் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டது.
திருவெண்காடு மின் உதவி பொறியாளா் ரமேஷ் தலைமையில் ஆக்க முகவா்கள், மின்பாதை ஆய்வாளா்கள், ஊழியா்கள் உள்ளிட்டோா் மேற்கண்ட பகுதியில் விழுந்து கிடந்த மின் கம்பங்களை அகற்றினா். தொடா்ந்து புதிய மின் கம்பங்கள் நடப்பட்டு, கம்பிகள் பொருத்தப்பட்டன. பின்னா் மின் விநியோகம் வழங்கப்பட்டது.
இதேபோல மேலப்பெரும்பள்ளம் ஊராட்சியில் 8 கிராமங்கள் உள்ளன. மின் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில், பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீா் வழங்க ஏதுவாக ஊராட்சிச் செயலாளா் சக்திவேல் மற்றும் ஊராட்சி பணியாளா்கள் ஜெனரேட்டா் மூலம் மின் விநியோகம் செய்து மின் மோட்டாா்களை இயக்கி மக்களுக்கு தடையின்றி குடிநீா் வழங்கினா்.