செய்திகள் :

நாட்டின் நீண்ட கால உள்துறை அமைச்சா் அமித் ஷா!- எல்.கே.அத்வானியை விஞ்சினாா்

post image

பாஜக முதுபெரும் தலைவரும், முன்னாள் மத்திய உள்துறை அமைச்சருமான எல்.கே.அத்வானியின் பதவிக் காலத்தை விஞ்சி, நாட்டின் நீண்ட கால உள்துறை அமைச்சா் என்ற பெருமையைப் பெற்றுள்ளாா் அமித் ஷா (60).

மத்திய உள்துறை அமைச்சா் பதவியில் 2,258 நாள்களை அமித் ஷா நிறைவு செய்து, எல்.கே.அத்வானியின் 2,256 பதவி நாள்களை கடந்துள்ளாா்.

தேசிய அரசியலில் தடம்பதிப்பு: கடந்த 1964-இல் மும்பையில் குஜராத்தி குடும்பத்தில் பிறந்த அமித் ஷா, தனது 16 வயதில் ஆா்எஸ்எஸ் அமைப்பில் இணைந்தாா்; அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் அமைப்பில் தீவிரமாக செயல்பட்டாா்.

கடந்த 2014-இல் தேசிய அரசியலில் நுழையும் முன்பு, குஜராத்தில் நரேந்திர மோடி தலைமையிலான மாநில அரசில் உள்துறை அமைச்சராக பதவி வகித்தாா். மோடி பிரதமரான பின் பாஜகவின் முக்கிய தேசிய முகமானாா் அமித் ஷா. தனது ஆதரவாளா்களால் நவீன அரசியல் சாணக்கியா் என புகழப்படும் இவா், 2014-இல் பாஜகவின் இளவயது தேசியத் தலைவராக பதவியேற்றாா். கடந்த 2019-இல் தனது 54-ஆவது வயதில் மத்திய உள்துறை அமைச்சரானாா்.

மைல்கல் நடவடிக்கைகள் என்னென்ன?: கடந்த 2019-இல் ஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து ரத்து நடவடிக்கை, 2026, மாா்ச் மாதத்துக்குள் நக்ஸல் தீவிரவாதத்தை ஒழிக்கும் இலக்குடன் அதிரடி நடவடிக்கைகள், மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் அமலாக்கம், குடியுரிமை திருத்தச் சட்ட நிறைவேற்றம், ஹுரியத் அமைப்புகளுக்கான தடை, ரூ.11,961 கோடிக்கும் மேற்பட்ட போதைப் பொருள் பறிமுதல், வடகிழக்கில் 10,000-க்கும் மேற்பட்ட கிளா்ச்சியாளா்களின் சரணடைதலுக்கு வழிவகுத்த 12 அமைதி ஒப்பந்தங்கள் உள்ளிட்டவை மைல்கல் நடவடிக்கைகளாகும்.

முன்னதாக, தொடா்ந்து நீண்ட காலம் பதவி வகித்த இரண்டாவது பிரதமா் என்ற சாதனையை பிரதமா் மோடி அண்மையில் படைத்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

பாராட்டு: அமித் ஷாவுக்கு தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் பிரதமா் மோடி உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா். அப்போது, ‘இது தொடக்கம்தான்; இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது’ என்று பிரதமா் கூறினாா். அவரது இக்கருத்து எம்.பி.க்கள் மத்தியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்துறை அமைச்சா் பதவி வகித்த நாள்கள்

அமித் ஷா- 2,258 (2019, மே 30 முதல்...)

எல்.கே.அத்வானி - 2,256 (1999, மாா்ச் 19 - 2004, மே 22)

ஜி.பி.பந்த் - 2,249 நாள்கள் (1955, ஜனவரி 10 - 1961, மாா்ச் 7)

உத்தரகாசி பேரிடர்! மாயமான கேரள சுற்றுலாக் குழு கண்டுபிடிப்பு!

உத்தரகண்ட் மேகவெடிப்பைத் தொடர்ந்த பேரிடரில் மாயமானதாகக் கருதப்பட்ட கேரளத்தைச் சேர்ந்த 28 சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.உத்தரகாசி மாவட்டத்தில் ஏற்பட்ட மேகவெடிப்பைத் தொடர... மேலும் பார்க்க

சட்டை படம்தான் குறியீடு; யாரென்றே தெரியாது!போதைப்பொருள் கும்பலின் அதிர்ச்சிப் பின்னணி!!

மெபெட்ரோன் எனப்படும் போதைப் பொருள் தயாரிக்கும் தொழிற்சாலையைக் கண்டுபிடித்த மும்பை காவல்துறையினர், சட்டைகளின் படங்களை அவர்கள் குறியீடாகப் பயன்படுத்தி வந்ததைக் கண்டறிந்துள்ளனர்.மைசூரில் உள்ள தொழிற்சாலை ... மேலும் பார்க்க

ஒரே மாதத்தில் 3 பேர் தீக்குளித்து தற்கொலை!

ஒடிஸாவில் ஆண் நண்பர் ஒருவரின் மிரட்டலால், மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஒடிஸா மாநிலத்தின் படபடா கிராமத்தில் மூன்றாமாண்டு மாணவி ஒருவருக்கு கடந்த 2 ஆண்டுகளாக அவரது ... மேலும் பார்க்க

எல்லைப் பிரச்னைக்குப் பின் முதல்முறை! சீனா செல்கிறார் பிரதமர் மோடி?

2020-ம் ஆண்டு ஏற்பட்ட எல்லைப் பிரச்னைக்குப் பிறகு, முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடி, சீனாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, வரும் ஆக.29 ஆம் தேதி மு... மேலும் பார்க்க

தில்லியில்.. 8 வங்கதேசத்தினர் உள்பட 22 வெளிநாட்டவர் வெளியேற்றம்!

தில்லியில், சட்டவிரோதமாக குடியேறிய 8 வங்கதேசத்தினர் உள்பட 22 வெளிநாட்டவர், தங்களது தாயகங்களுக்கு அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.தில்லியின் துவாரகா பகுதியில், விசா உள்ளிட்ட உரிய ஆவணங்களின்றி ச... மேலும் பார்க்க

நீதிமன்ற அவமதிப்பு: பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடுப்போம்! - பாஜக

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் வழக்கில் நீதிமன்றதிற்கு எதிராக கருத்து தெரிவித்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடரப் போவதாக பாஜக கூறியுள்ளது.இந்திய - சீன எல்லையில் 2,000 சதுர கி... மேலும் பார்க்க