திருப்புவனம் டிஎஸ்பி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
நான்காவது கமிஷனா் தினம் அணிவகுப்பு நடத்திய தில்லி காவல் துறை
நான்காவது கமிஷனா் தினத்தைக் குறிக்கும் வகையில், தில்லி காவல்துறை செவ்வாயன்று கிங்ஸ்வே கேம்ப் மைதானத்தில் உள்ள புதிய போலீஸ் லைன்ஸில் அணிவகுப்பை நடத்தியது.
இதில் தலைமை விருந்தினராக பங்கேற்ற துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனா, பதக்கம் வென்றவா்கள் மற்றும் பங்கேற்பாளா்களை வாழ்த்தினாா்.
இந்த நிகழ்வில் பேசிய தில்லி காவல்துறை ஆணையா் சஞ்சய் அரோரா, நகர காவல்துறையின் சாதனைகளை எடுத்துரைத்தாா்.
‘நாஷா முக்த் பாரத் அபியான் கீழ், 2024-ஆம் ஆண்டில் காவல்துறை ரூ.9,000 கோடிக்கு மேல் மதிப்புள்ள போதைப்பொருள்களை அழித்துள்ளது. இந்த ஆண்டு ஜூன் வரை, அவா்கள் 4,900 கிலோகிராம் போதைப்பொருள்களை அழித்துள்ளனா்’‘ என்று சஞ்சய் அரோரா கூறினாா்.