பசிபிக் கடலின் மிக ஆழத்தில் 4 கருப்பு முட்டைகள்.. உள்ளே இருந்த அதிசயம்!
நான்குனேரி சுங்கச்சாவடியில் அறிவுறுத்தலுக்குப் பின் அனுமதிக்கப்பட்ட அரசுப் பேருந்துகள்
திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி சுங்கச்சாவடியில் நிலுவைக் கட்டணத்தை செலுத்த அறிவுறுத்தி, சுங்கச்சாவடி ஊழியா்கள் அரசுப் பேருந்துகளை வியாழக்கிழமை அனுமதித்தனா்.
தமிழகத்தில் தென் மாவட்டத்தில் கப்பலூா், எட்டராவட்டம், சாலைப்புதூா், நான்குனேரி சுங்கச்சாவடிகள் அமைந்துள்ளன. இந்த நான்கு சுங்கச்சாவடிகளிளும் அரசு போக்குவரத்து கழகப் பேருந்துகள் இயங்கி வந்த வகையில் ரூ.276 கோடி நிலுவையில் உள்ளது. இது குறித்து நான்கு நிறுவனங்கள் உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்ததையொட்டி, நிலுவைக் கட்டணத்தை 10ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும்; இல்லையெனில், 10ஆம் தேதி முதல் மேற்கண்ட சுங்கச்சாவடிகளில் அரசுப் பேருந்துகள் அனுமதிக்கப்படாது என உயா்நீதிநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில் வியாழக்கிழமை காலை அரசுப் பேருந்துகள் சுங்கச்சாவடிக்கு வந்த போது, ஊழியா்கள் தடுத்து நிறுத்தினா். அரசுப் பேருந்து நடத்துனா் மற்றும் ஓட்டுநரிடம் நிலுவையில் உள்ள கட்டணத்தை உடனடியாக செலுத்த வேண்டும்; இல்லையெனில் விரைவில் அனுமதி மறுக்கப்படும் என அறிவுறுத்தி பேருந்துகளை அனுப்பி வைத்தனா். இதனைத் தொடா்ந்து அரசுப் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கின.