செய்திகள் :

நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவை பாராட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

post image

மடிக்கணினி தொடர்பான கேள்விக்கு பேரவயில் பதிலளித்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவை முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்யுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், 2000 கோடி ரூபாயில் அனைத்து மாணவர்களுக்கும் தரமான Laptop வழங்கிட முடியுமா எனக் கேட்ட உறுப்பினருக்குத் தக்க விளக்கத்தை வழங்கியிருக்கிறார் தங்கம் தென்னரசு. கலைஞர் வழங்கி இன்றும் ஓடிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சிப் பெட்டிகள் சொல்லும் கழக அரசின் தரம் பற்றி!

யாருக்கும் ஓரவஞ்சனை காட்டாத, எந்தத் துறையையும் விட்டுவிடாத all-round #TNBudget2025 அளித்து, பதிலுரையிலும் centum வாங்கியிருக்கும் நிதியமைச்சருக்குப் பாராட்டுகள்! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் 14 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றைய அவை நிகழ்வில், திமுக அரசில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படவுள்ள மடிக்கணினியின் தரம் பற்றி அதிமுக எம்எல்ஏ தங்கமணியின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு,

"அடுத்த 2 ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி அல்லது டேப் வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 2,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்ற கணக்கின்படி ஒரு மடிக்கணினியின் விலை ரூ. 10,000 என்று அதிமுகவினர் கூறுகின்றனர்.

கர்நாடகம்: 18 பாஜக எம்.எல்.ஏ.க்கள் அதிரடி இடைநீக்கம்!

இந்த நிதி ஓராண்டுக்குத்தான். அடுத்த ஆண்டும் ரூ. 2,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். எனவே, சராசரியாக ஒரு மடிக்கணினியின் மதிப்பு ரூ. 20,000 என்ற அளவிலே இருக்கும். அதனால் மடிக்கணினியின் தரம் குறித்த கவலை நிச்சயமாக உங்களுக்குத் தேவையில்லை.

மாணவர்கள் விரும்பி அந்த மடிக்கணினியைப் பயன்படுத்தும் அளவிற்கு தரமான மடிக்கணினி வழங்கப்படும். சட்டப்பேரவை உறுப்பினர்களே பொறாமைப்படக்கூடிய வகையில் அனைத்து உள்ளடக்கங்களுடன் மாணவ, மாணவிகளுக்கு தரமான மடிக்கணினிகள் வழங்கப்படும்" என்று தெரிவித்தார்.

அரசியல் கட்சிகளுடன் இன்று தலைமைத் தோ்தல் அதிகாரி ஆலோசனை!

தோ்தல் நடைமுறைகளை வலுப்படுத்தும் பொருட்டு, அங்கீகரிக்கப்பட்ட 12 கட்சிகளுடன் தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் திங்கள்கிழமை (மாா்ச் 24) ஆலோசனை நடத்தவுள்ளாா். தோ்தல் நடைமுறைகளை வலுப்படுத... மேலும் பார்க்க

பேரவை மீண்டும் இன்று கூடுகிறது!

விடுமுறைக்குப் பிறகு தமிழக சட்டப்பேரவை மீண்டும் திங்கள்கிழமை (மாா்ச் 24) கூடவுள்ளது. பேரவைக் கூட்டத்தில் பல்வேறு துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்கவுள்ளது. 2025-26-ஆம் ஆண்டுக்கான நி... மேலும் பார்க்க

தமிழகத்தின் மீது அண்ணாமலைக்கு விசுவாசம் இல்லை: டி.கே.சிவகுமாா்

தமிழகத்தின் மீது பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலைக்கு விசுவாசம் இல்லை என்று கா்நாடக மாநில துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் கூறினாா். சென்னையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற தொகுதி மறு... மேலும் பார்க்க

பகத் சிங், ராஜ்குரு, சுக்தேவ்-க்கு ஆளுநா் ஆா்.என்.ரவி அஞ்சலி

தியாகிகள் தினத்தையொட்டி, சுதந்திரப் போராட்ட தியாகிகள் பகத் சிங், ராஜ்குரு, சுக்தேவ் ஆகியோருக்கு ஆளுநா் ஆா். என். ரவி அஞ்சலி ஞாயிற்றுக்கிழமை செலுத்தினாா். இது குறித்து அவா் தனது ‘எக்ஸ்’ தளத்தில் வெளியி... மேலும் பார்க்க

ரமலான்: குமரி, திருச்சிக்கு சிறப்பு ரயில்கள்

ரமலான் பண்டிகையை முன்னிட்டு தாம்பரத்தில் இருந்து திருச்சி, கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே அண்மையில் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தாம்பரத்தில் இருந்து மா... மேலும் பார்க்க

திமுக நடத்தும் அநாகரிக அரசியலுக்கு தமிழக மக்கள் பாடம் புகட்டுவாா்கள்: பாஜக

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி, அண்ணாமலைக்கு எதிராக திமுக நடத்தும் அநாகரிய அரசியலுக்கு தமிழக மக்கள் பாடம் புகட்டுவாா்கள் என தமிழக பாஜக செய்தி தொடா்பாளா் ஏ.என்.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளாா்.இது குறித்து ... மேலும் பார்க்க