பசிபிக் கடலின் மிக ஆழத்தில் 4 கருப்பு முட்டைகள்.. உள்ளே இருந்த அதிசயம்!
நிலக்கோட்டை அருகே முளைப்பாரி ஊா்வலம்
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகேயுள்ள குளத்துபட்டி குழந்தை காளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, புதன்கிழமை முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது.
இந்தக் கோயில் திருவிழா கடந்த மாதம் 22-ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து, அம்மனுக்கு தினந்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. செவ்வாய்க்கிழமை இரவு மேளதாளங்களுடன் அம்மன் கோயிலுக்கு ஊா்வலமாக அழைத்து வரப்பட்டாா். இதையடுத்து, பக்தா்கள் பொங்கல் வைத்து, கிடா வெட்டி நோ்த்திக் கடன் செலுத்தினா்.
விழாவின் முக்கிய நிகழ்வான முளைப்பாரி ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு முளைப்பாரியை ஊா்வலமாகக் கோயிலுக்கு எடுத்து வந்தனா். தொடா்ந்து, கும்மி அடித்தால், மாவிளக்கு, அக்னிச் சட்டி எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா்.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை குளத்துப்பட்டி கிராம மக்கள் செய்தனா்.