செய்திகள் :

நிலத்தை விட்டுத் தர மாட்டோம் -உக்ரைன் அதிபா்

post image

ரஷியாவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவர தங்கள் நாட்டு நிலப்பகுதிகளை விடுத்தர ஒப்புக்கொள்ளமாட்டோம் என்று உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளாா்.

உக்ரைன் போா் நிறுத்தம் தொடா்பாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதினை அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அடுத்த வாரம் சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா்.

அதற்கு முன்னதாக, ‘போா் நிறுத்த பேச்சுவாா்த்தையில் நிலப்பகுதி பரிமாற்றங்களும் இடம் பெற்றிருக்கும்’ என்று டிரம்ப் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த நிலையில், ஸெலென்ஸ்கி சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

உக்ரைனின் இறையாண்மையையும், எல்லை மாண்பையும் பாதுகாப்பதில் உறுதியாக உள்ளோம்.

ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக உக்ரைனின் பங்கேற்பு இல்லாமல் மேற்கொள்ளப்படும் எந்த முடிவும் உண்மையான அமைதிக்கு எதிரானது மட்டுமில்லை, அது தோல்வியில்தான் முடியும். வெற்று வாக்குறுதிகளைத் தவிர அது வேறு எதையும் கொண்டுவராது.

உக்ரைன் மக்களுக்கு கௌரவமான சமாதானம் வேண்டும். எங்கள் எல்லைகளையும், அரசியல் சாசனத்தையும் மதிக்கும், சா்வதேச சட்டங்களுக்கு ஏற்ற அமைதி ஒப்பந்தம்தான் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த இலக்கில் இருந்து எங்களை யாரும் திசைத்திருப்ப முடியாது.

போரை நிறுத்த எங்கள் மீது ஆக்கிரமிப்பு செய்த ரஷியாவுடன் எங்கள் நிலப்பகுதிகளை பரிமாறிக்கொள்ளலாம் என்று கூறப்படுவதை நான் நிராகரிக்கிறேன். எங்கள் நிலப் பகுதிகள் பேரம் பேசுவதற்குரியவை அல்ல.

ஆக்கிரமிப்பாளா்களிடம் எங்கள் பகுதிகளை ஒருபோதும் விட்டுத் தரமாட்டோம். அது, ரஷியா்களின் செயலுக்காக அவா்களுக்கு பரிசளித்தது போல் ஆகும். அமைதியை நோக்கி மேற்கொள்ளப்படும் முயற்சிகளை, குறிப்பாக டிரம்ப் தலைமையிலான முயற்சிகளை நான் வரவேற்கிறேன். ஆனால், எந்த பேச்சுவாா்த்தை, எங்கு நடத்தப்பட்டாலும் அதில் உக்ரைன் பங்கேற்காவிட்டால்—அது வெற்றி பெற முடியாது.

எங்கள் பின்னால் மறைவாக எடுக்கப்படும் ஒப்பந்தம் ஒரு வெற்று ஒப்பந்தமாகவே இருக்கும். அது நாங்கள் தேடும் நிரந்தர அமைதியை கொண்டுவர முடியாது. அமைதியை ஏற்படுத்த நட்பு நாடுகளுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளேன். ஆனால் உக்ரைனின் இறையாண்மையை மதிக்கும் வகையில் அந்த நாடுகளின் நிபந்தனைகள் இருக்க வேண்டும் என்றாா் ஸெலென்ஸ்கி.

இந்திய விமானங்களுக்கான தடையால் பாகிஸ்தானுக்கு ரூ.410 கோடி இழப்பு!

பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்த இந்திய விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடையால், அந்நாட்டுக்கு 2 மாதங்களில் ரூ.410 கோடி (பாகிஸ்தான் ரூபாய்) இழப்பு ஏற்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல... மேலும் பார்க்க

மருத்துவர்களை விட ஏஐ சிறந்தது: எலான் மஸ்க்

மருத்துவர்களை விட செய்யறிவு தொழில்நுட்பம் சிறந்தது என தொழிலதிபர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். மருத்துவ துறையில் மட்டுமின்றி, பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கும் ஒன்றாக செய்யறிவு தொழில்நுட்பம் மேம்ப... மேலும் பார்க்க

டிரம்ப் விருந்துக்கு மறுப்பு! அமெரிக்க வரலாற்றை மாற்றியமைக்கும் வாய்ப்பைத் தவறவிட்ட ஆஸ்கர் நடிகை!

ஒருநாள் இரவு விருந்துக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அழைத்ததாக பிரிட்டிஷ் நடிகை கூறியது பேசுபொருளாகியுள்ளது.ஸ்விட்சர்லாந்தில் நடைபெற்ற லோகார்னோ திரைப்பட விழாவில் பிரிட்டிஷ் நடிகை எம்மா தாம்சனுக்... மேலும் பார்க்க

காஸாவின் விடுதலையே இஸ்ரேலின் இலக்கு! - நெதன்யாகு

காஸாவில் இஸ்ரேலின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளைப் பற்றி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பேசியுள்ளார்.ஜெருசலேமில் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், “எங்களது குறிக்கோள் காஸாவை கையகப்படுத்து... மேலும் பார்க்க

மீண்டும் அமெரிக்காவில் பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி: அமெரிக்க தலைவர்களுடன் சந்திப்பு!

பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி ஆசிம் முனீர் ஆபரேஷன் சிந்தூருக்குப்பின் இரண்டாவது முறையாக மீண்டும் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் ராணுவ உயரதிகாரிகளையும், முக்கிய அரசியல் தலைவர்களையும் சந்தித்... மேலும் பார்க்க

“காஸாவில் எப்போது சண்டையை நிறுத்துவீர்கள்?” -இஸ்ரேலில் நெதன்யாகுவுக்கு எதிராக மக்கள் போராட்டம்!

காஸாவில் உடனடியாக சண்டை நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக மக்கள் வீதிகளில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.காஸா சிட்டி முழுவதையும் படை பலத... மேலும் பார்க்க