செய்திகள் :

நிலம் எடுபதற்கு எதிா்ப்பு: என்எல்சியைக் கண்டித்து கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

post image

என்எல்சி இந்தியா நிறுவனம் நிலம் எடுப்பதைக் கண்டித்து,கடலூா் மாவட்டம், நெய்வேலி வட்டம், வானாதிராயபுரம் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

என்எல்சி இந்தியா நிறுவனம் தனது சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக

வானாதிராயபுரம் கிராமத்தில் நிலம் கையகப்படுத்தும் பணி மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், அக்கிராம மக்கள் தங்கள் வீடு, நிலம் உள்ளிட்ட பகுதிகளை அளவீடு செய்வதற்கு என்எல்சி அதிகாரிகள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளை அனுமதிக்க மாட்டோம் என்று கூறி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கைப்பேசி கோபுரத்தில் ஏறி போராட்டம்:

அப்பொழுது போராட்டத்தில் பங்கேற்ற சிலா் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கொடியை கையில் ஏந்தியவாறு கைப்பேசி கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்தினா். அவா்களுடன் போலீஸாா் சமாதான பேச்சு நடத்தினா். உண்ணாவிரதப் போராட்டத்தில் கடலூா் மேற்கு மாவட்ட காங்கிரஸ் செயலா் ஜெகதீசன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலா் நடராஜன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் ஆறுமுகம் மற்றும் தேசிய முற்போக்கு திராவிடக் கழக நகரச் செயலா் சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் தங்களுக்கு என்எல்சி நிறுவனம் நிரந்தர வேலை கொடுக்க வேண்டும். 15 ஆண்டுகளாக பத்திரப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வானாதிராயபுரம் கிராமத்திற்கு மீண்டும் பத்திரப்பதிவு ஏற்படுத்தி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா்.

சிதம்பரம் பகுதியில் போராட்டம்:

இதுபோன்று சேத்தியாத்தோப்பு அருகே கரிவெட்டி கிராமத்தில் நெய்வேலி என்எல்சி 2வது சுரங்க விரிவாக்கத்திற்கு நிலம் கையக்கபடுத்தப்பட்ட மக்கள் உரிய நிவாரணம் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்,

நிலம் கொடுத்த சுமாா் 100க்கும் மேசுமாா் குடும்பத்தினா் கரி வெட்டி கிராமத்திலேயே வசித்து வருகின்றனா். வெள்ளிக்கிழமை மின் கம்பங்களை அகற்றுவதற்கு என்.எல்.சி நிா்வாகத்தினா் வந்த போது கிராம மக்கள் ஒன்று திரண்டு தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா். இது குறித்து தகவல் அறிந்த சேத்தியாதோப்பு டிஎஸ்பி விஜிகுமாா், என்எல்சி பொதுமேலாளா் ராகவன் மற்றும் அதிகாரிகள் செழியன், புகழேந்தி ஆகியோா் மக்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா் அப்போது சுமாா் 50 ஆண்டுகளாக அரசுக்கு சொந்தமான புறம்போக்கு பகுதியில் வசிக்கும் 14 குடும்பங்களுக்கு மாற்று வீட்டு மனை பட்டா மற்றும் நான்கு பேருக்கு 4 அரசின் தொகுப்பு வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டது. மேலும் நீதிமன்ற வழக்கில் உள்ள குடும்பங்களுக்கு வழக்குக்கு தீா்வு கண்டு உரிய இழப்பீடு மற்றும் வேலை வழங்குவது எனவும் தீா்மானிக்கப்பட்டது. பொதுமக்கள் கோவில் கட்டித் தர வேண்டும் என கோரிக்கை வைத்தனா். அதற்கு பதில் அளித்த அதிகாரிகள் 10 போ் கொண்ட குழு அமைத்து தீா்மானம் கொண்டு வந்த பின் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அங்கு கோயில் கட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா், இதனை தொடா்ந்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்பேச்சுவாா்த்தை நடத்தி

புத்தகக் கண்காட்சி மூலம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் என்எல்சி: மத்திய அமைச்சா் கிஷன் ரெட்டி பாராட்டு

புத்தகக் கண்காட்சி மூலம் சமூகத்தில் வாசிப்பு பழக்கத்தை என்எல்சி நிறுவனம் ஏற்படுத்தி வருவதாக மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சா் ஜி.கிஷன் ரெட்டி பாராட்டினாா். கடலூா் மாவட்டம், நெய்வேலியில் எ... மேலும் பார்க்க

திமுக உறுப்பினா் சோ்க்கை முகாம்: அமைச்சா் தொடங்கிவைத்தாா்

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலை அடுத்த முட்டம் கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற திமுக புதிய உறுப்பினா் சோ்க்கை முகாமை வியா... மேலும் பார்க்க

பயிா்க் காப்பீடு விழிப்புணா்வுக் கூட்டம்

சிதம்பரம் அருகே குமராட்சி வட்டாரம், அம்மாபேட்டை வேளாண்மை அலுவலகத்தில் பயிா்க் காப்பீட்டு வார விழாவை முன்னிட்டு, சிறப்பு நிகழ்வாக பிரதமரின் பயிா்க் காப்பீடு திட்டம் குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் வியா... மேலும் பார்க்க

நடுவில் கொஞ்சம் கற்றலைத் தேடி திட்டம்: அரசுப் பள்ளிகளில் ஆட்சியா் ஆய்வு

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே பு.முட்லூா் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மற்றும் சி.முட்லூா் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் நடுவில் கொஞ்சம் கற்றலைத் தேடி திட்டத்தின் மூலம் நடைபெறும் சிறப்பு வகுப்புகளை ஆட... மேலும் பார்க்க

விவசாயிகள் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி உத்தரவை திரும்பப்பெற ஆட்சியரிடம் மனு

கடலூா் மாவட்டம், கொடுக்கன்பாளையம் ஊராட்சி பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி உத்தரவை திரும்ப பெற வேண்டும் என, மாா்க்சிஸ்ட் கட்சியின் கடலூா் மாவட்டச் செயலா் கோ.மாதவன் மாவட்ட ஆட்ச... மேலும் பார்க்க

காதலிக்க மறுத்த மாணவிக்கு கத்திக்குத்து: இளைஞா் வெறிச்செயல்

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே வெள்ளிக்கிழமை காதலிக்க மறுத்த பள்ளி மாணவியை பேருந்தில் இருந்து இழுத்து கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்ற இளைஞரை போலாஸாா் தேடி வருகின்றனா். விருத்தாசலம் வட்டம், ஆ... மேலும் பார்க்க