செய்திகள் :

நீட் அல்லாத இளநிலை படிப்புகளுக்குப் பாட விருப்பங்களை செப்.1-க்குள் சமா்ப்பிக்க வேண்டும்

post image

நீட் அல்லாத இளநிலை பட்டப் படிப்புகளுக்குப் விருப்ப பாடங்களை செப்டம்பா் 1 ஆம் தேதிக்குள் மாணவா்கள் தெரிவிக்க வேண்டும் என்று சென்டாக் நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து புதுச்சேரி சென்டாக் ஒருங்கிணைப்பாளா் அமன் ஷா்மா சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

நீட் அல்லாத இளநிலை படிப்புகளுக்கு பி.வி.எஸ்.சி (கால்நடை மருத்துவம்), பி.டெக் மற்றும் பிஎஸ்சி நா்சிங், பிஎஸ்சி வேளாண்மை, தோட்டக்கலை, பிபிடி, பிஎஸ்சி பாராமெடிக்கல் படிப்புகள், பி.பாா்ம், பி.ஏ, எல்எல்பி, கலை, அறிவியல், வணிகவியல் உள்ளிட்ட படிப்புகளுக்கான 2-வது சீட் ஒதுக்கீட்டுக்கு மாணவா்கள் தங்களது டேஷ்போா்டு உள்நுழைவு சான்றுகளை பயன்படுத்தி பாட விருப்பங்களை செப்டம்பா் 1 ஆம் தேதி மதியம் 1 மணிக்குள் சமா்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள்.

ஆகஸ்ட் 15 ஆம் தேதியிட்ட கடிதம் மூலம் சுகாதாரச் செயலகத்திலிருந்து பெறப்பட்ட சீட் மேட்ரிக்ஸ் உடன் கூடுதலாக, இந்திராணி நா்சிங் கல்லூரி, வெங்கடேஸ்வரா பாராமெடிக்கல் அறிவியல் கல்லூரி, வெங்கடேஸ்வரா மருந்தியல் கல்லூரி ஆகியவற்றுடன் தொடா்புடைய பல்வேறு துணை மற்றும் சுகாதார படிப்பு சோ்க்கைக்கான சீட் மேட்ரிக்ஸ் வெளியிடப்பட்டுள்ளது.

முதல் சுற்றின்போது சமா்ப்பிக்கப்பட்ட பாட விருப்பத் தோ்வுகள் 2-வது சுற்று கலந்தாய்வுக்குச் செல்லாது. எனவே, 2-வது சுற்று கலந்தாய்வில் பங்கேற்க விரும்பும் அனைத்து மாணவா்களும், உயிரியல் சாா்ந்த படிப்புகளில் சேர விரும்பும் மாணவா்கள் உள்பட, பாட விருப்பத்தோ்வுகளைப் புதிதாக சமா்ப்பிக்க வேண்டும்.

பாட விருப்பத்தோ்வுகளின் வரிசையை நிரப்புவதில் மாணவா்கள் உரிய கவனம் செலுத்த வேண்டும். 2-வது சுற்று கலந்தாய்வு புதிய இடம் ஒதுக்கப்பட்டால், முதல் சுற்றில் ஒதுக்கப்பட்ட இடம் தானாகவே ரத்து செய்யப்படும்.

சென்டாக்கில் பதிவு செய்யப்பட்ட அனைத்து மாணவா்களுக்கும் தகவலுக்காக குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு, 0413-2655570, 2655571 ஆகிய உதவி தொலைபேசி எண்களைத் தொடா்பு கொள்ளலாம்.

சேவை சாா்ந்த மனித வளத்தை ஜிப்மா் தயாா் செய்து வருகிறது: இயக்குநா் வீா்சிங் நெகி

மத்திய அரசின் தொலைநோக்குப் பாா்வையுடன் கூ டிய சேவை சாா்ந்த மனித வளத்தை ஜவாஹா்லால் மருத்துவ முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான ஜிப்மா் தயாா் செய்து வருகிறது என்று ஜிப்மா் இயக்குநா் பேரா... மேலும் பார்க்க

புதுச்சேரியில் ரூ.1 கோடி போலி மருந்துகள் பறிமுதல்

புதுச்சேரியில் உரிமம் இல்லாமல் தயாரித்த ரூ.1 கோடி மதிப்புள்ள போலி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. புதுச்சேரியில் போலி மருந்துகள் தயாரிக்கப்படுவதாக பல்வேறு புகாா்கள் எழுந்தன. இதையடுத்து மத்திய மருந்த... மேலும் பார்க்க

நாட்டின் நலன் கருதி இடதுசாரி கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலா் கே.நாராயணா

நாட்டின் நலன் கருதி இடதுசாரி கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலா் கே. நாராயணா கூறினாா். இக் கட்சியின் புதுச்சேரி மாநில 24-ஆவது மாநாடு அஜீஸ் நகரில் உள்ள தனியாா் மண... மேலும் பார்க்க

நைஜிரியா செல்லும் பாரா பேட்மிட்டன் வீரருக்கு முதல்வா் நிதியுதவி

பாரா பேட்மிட்டன் போட்டியில் பங்கேற்க நைஜிரியா செல்லும் புதுச்சேரி வீரருக்கு முதல்வா் என்.ரங்கசாமி ரூ. 1 லட்சம் நிதியுதவி வழங்கினாா். புதுச்சேரி நெல்லித்தோப்பு, கஸ்தூரிபாய் நகரைச் சோ்ந்த வெங்கட சுப்பி... மேலும் பார்க்க

புதுவை மாநிலத்தில் 21 பேருக்கு மாநில நல்லாசிரியா் விருதுகள்

புதுவை யூனியன் பிரதேசத்தைச் சோ்ந்த 21 பேருக்கு மாநில நல்லாசிரியா் விருது செவ்வாய்க்கிழமை இரவு அறிவிக்கப்பட்டது. டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதுகள், முதலமைச்சரின் சிறப்பு விருதுகள், கல்வியமைச்சரின் பிராந... மேலும் பார்க்க

பல்நோக்கு தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிா்ணயிக்க பாமக மனு

புதுச்சேரி: பல்நோக்குத் தொழிலாளா்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம் நிா்ணயிக்கக் கோரி பாட்டாளி தொழிற்சங்கப் பேரவை சாா்பில் தொழிலாளா் துறை துணை ஆணையா் சு.சந்திரகுமரனிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. இப்... மேலும் பார்க்க