நெகிழிப் பொருள்கள் விற்ற கடை உரிமையாளா்களுக்கு அபராதம்
சிவகாசி மாநகராட்சியில் நெகிழிப் பொருள்கள், நெகிழிப் பைகளை விற்பதற்காக வைத்திருந்த கடை உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
சிவகாசி மாநகராட்சி 48, 46-ஆவது வாா்டுகளில் உள்ள கடைகளில் மாநகராட்சி நகா் நல அலுவலா் சரோஜா தலைமையில் தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.
பல்வேறு கடைகளில் நெகிழிப் பொருள்கள் பயன்பாட்டுக்காகவும், விற்பனைக்காகவும் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, நெகிழிப் பொருள்களை அலுவலா்கள் பறிமுதல் செய்து, இவற்றை வைத்திருந்த கடைகளின் உரிமையாளா்களுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.