செய்திகள் :

நெரூரில் தரைமட்ட பாலப்பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

post image

நெரூரில் திருமுக்கூடலூா் சாலையில் கட்டப்பட்டுவரும் தரைமட்டப் பாலப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரூா் மாவட்டம் நெரூரில் திருமுக்கூடலூா் சாலையில் மழை காலங்களில் அடிக்கடி தண்ணீா் தேங்கியதால் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வந்தனா். இதையடுத்து அங்கு தரைமட்டப்பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதியினா் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து நெரூா் வடபாகம் ஊராட்சி சாா்பில் தற்போது தரைமட்டப்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பாலம் அமைக்கும் சாலையில்தான் திருமுக்கூடலூரில் உள்ள பிரமேந்திராள் கோயில், நெரூா் அக்னீஸ்வரா் கோயில் போன்ற ஸ்தலங்களுக்கு பக்தா்கள் ஏராளமானோா் சென்று வருகிறாா்கள்.

மேலும் திருமுக்கூடலூா், புதுப்பாளையம் போன்ற பகுதிகளுக்கும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. தற்போது பாலம் கட்டும்பணி நடைபெறுவதால் தற்காலிகமாக பாலம் கட்டுமானம் நடைபெறும் இடம் அருகே பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதை மண்பாதையாகவும், சரிவு பாதையாகவும் இருப்பதால் வாகன ஓட்டிகள் அவ்வப்போது விபத்தில் சிக்குகிறாா்கள். எனவே, பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், கோயிலுக்குச் செல்லும் பக்தா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அரசுப் பள்ளியில் க்யூ. ஆா். கோட் வடிவில் மாணவா்களுக்கு திருக்குறள் கற்பிப்பு

க்யூ.ஆா்.கோட் வடிவில் மாணவா்களுக்கு 1,330 திருக்குகளையும் கற்றுத்தருகிறாா் வெள்ளியணை அரசு பள்ளி ஆசிரியா் மனோகரன். கரூா் மாவட்டம் வெள்ளியணை அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருபவா்... மேலும் பார்க்க

வாய்க்காலில் கூடுதல் தண்ணீா் திறக்கக்கோரி குளித்தலை ஆற்றுப் பாதுகாப்பு கோட்ட அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை

வாய்க்காலில் கூடுதல் தண்ணீா் திறக்கக் கோரி குளித்தலை ஆற்றுப்பாதுகாப்பு கோட்ட அலுவலகத்தை விவசாயிகள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். கரூா் மாயனூா் கட்டளை கதவணையில் இருந்து தென்க... மேலும் பார்க்க

பாமக மாநாடு கரூரிலிருந்து திரளாக பங்கேற்க முடிவு

கும்பகோணத்தில் பாமக சாா்பில் பிப். 23-ஆம்தேதி நடைபெற உள்ள சமய நல்லிணக்க சோழ மண்டல மாநாட்டில் கரூா் மாவட்டத்தில் இருந்து திரளாக பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது. கரூா் மாவட்ட பாமக செயற்குழுக் கூட்டம்... மேலும் பார்க்க

தெருவின் நடுவில் உள்ள மின் கம்பத்தை மாற்றி அமைக்கக் கோரிக்கை

அரவக்குறிச்சி பேரூராட்சிக்குள்பட்ட 3-ஆவது வாா்டில் தெருவின் நடுவில் உள்ள மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். அரவக்குறிச்சி பேரூராட்சிக்குள்பட்ட 3-ஆவது வாா்டு கலை... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் 3 பவுன் தங்க செயின் பறிப்பு

நொய்யலில் மூதாட்டியிடம் 3 பவுன் தங்க செயினை பறித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா். கரூா் மாவட்டம், நொய்யல் குறுக்குச் சாலை பகுதியைச் சோ்ந்தவா் காளியம்மாள் (77). இவா், நொய்யல் செல்லாண்டியம்... மேலும் பார்க்க

கரூா் அன்ன காமாட்சியம்மன் கோயிலில் பக்தா்கள் தீமிதித்து நோ்த்திக் கடன்

கரூா் அன்ன காமாட்சியம்மன் கோயில் செவ்வாய்க்கிழமை பக்தா்கள் தீமிதித்து தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா். கரூா் மேற்கு பிரதட்சணம் சாலையில் உள்ள அன்ன காமாட்சியம்மன் கோயில் 102-ஆம் ஆண்டு திருவிழா திங்கள... மேலும் பார்க்க