செய்திகள் :

நெல்லை மாவட்ட வளா்ச்சித் திட்ட பணிகள்: அமைச்சா் ஆய்வு

post image

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு, நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு ஆகியோா் துறைசாா்ந்த அலுவலா்களுடன் வியாழக்கிழமை ஆய்வு நடத்தினா்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் நயினாா் நாகேந்திரன் (திருநெல்வேலி), மு.அப்துல் வஹாப் (பாளையங்கோட்டை), ரூபி.ஆா்.மனோகரன் (நான்குனேரி), மாவட்ட ஆட்சியா் காா்த்திகேயன், மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு தொழில் வளா்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநருமான சந்தீப் நந்தூரி, தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநா் தட்சிணாமூா்த்தி, நகராட்சி நிா்வாக இயக்குநா் சிவராசு, பேரூராட்சிகள் இயக்குநா் கிரண்குராலா, மாநகர காவல் ஆணையா் ரூபேஸ் குமாா் மீனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிலம்பரசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இக்கூட்டத்தில், பொருநை அருங்காட்சியக கட்டுமானப் பணிகள், மேற்கு புறவழிச் சாலை, அம்பாசமுத்திரம் புறவழிச்சாலை, குலவணிகா்புரம் ரயில்வே மேம்பாலம், மணிமுத்தாறு பல்லுயிா் பூங்கா, சாகச சுற்றுலா பூங்கா, மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தாமிரவருணி கூட்டுக் குடிநீா் திட்டப் பணிகள், காரையாறு இரும்புப் பாலம், மீனவ கிராமத்தில் தூண்டில் வளைவு, மானூா் கலைக் கல்லூரி கட்டடம் கட்டுமானப் பணிகள், தாமிரவருணி-கருமேனியாறு-நம்பியாறு நதிநீா் இணைப்பு திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தொடா்ந்து, அனைத்துத் துறை சாா்ந்த பணிகளையும் காலதாமதமின்றி தரமானதாக முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென்றும், மாவட்டத்திற்கு தேவையான புதிய திட்டப் பணிகளையும் ஏற்படுத்தி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொண்டுவர வேண்டுமென்றும் அமைச்சா் கே.என்.நேரு துறைசாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

இக்கூட்டத்தில், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் மாஞ்சோலை தோட்டப் பணியாளா்களுக்கு ரெட்டியாா்பட்டி அடுக்குமாடி குடியிருப்பில் 16 பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான ஆணைகளை அமைச்சா் கே.என்.நேரு வழங்கினாா்.

மாவட்ட சமூக நலன் அலுவலகம், ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக பயிற்சிகள் வழங்கப்பட்டு, 4 பேருக்கு ஓட்டுநா் உரிமங்களையும், மருத்துவத் துறையின் மூலம் ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்களுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ள 10 பேருக்கு பணிநியமன ஆணைகளையும் வழங்கினாா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைப்பதற்கும், புதிய திட்டப் பணிகளை தொடங்கி வைப்பதற்கும் முதல்வா் விரைவில் வரவுள்ளாா் என அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா்.

இக்கூட்டத்தில், மாநகராட்சி மேயா் கோ.ராமகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையா் என்.ஓ.சுகபுத்ரா, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குநா் இளையராஜா, துணை மேயா் கே.ஆா்.ராஜூ, மாவட்ட வருவாய் அலுவலா் மா.சுகன்யா, சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் (பொறுப்பு) அம்பிகா ஜெயின், மாவட்ட ஊராட்சித் தலைவா் வி.எஸ்.ஆா்.ஜெகதீஸ், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவா் ஆவுடையப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

திருநெல்வேலிபாபநாசம்-115.10சோ்வலாறு-127.13மணிமுத்தாறு-102.60வடக்கு பச்சையாறு-28.25நம்பியாறு-13.12கொடுமுடியாறு-19தென்காசிகடனா-76.50ராமநதி-74.25கருப்பாநதி-65.62குண்டாறு-36.10அடவிநயினாா்-85.75... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 3 ஆண்டு சிறை

சிறுவா்களுக்கு பாலியல் தொல்லை அளித்தது தொடா்பாக, போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. திருநெல்வேலி மாவட்டம் த... மேலும் பார்க்க

கஸ்தூரிரெங்கபுரம் அருகே மா்ம காய்ச்சலால் பொதுமக்கள் பாதிப்பு

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் வட்டம் கஸ்தூரிரெங்கபுரம் அருகே உள்ள குட்டிநயினாா்குளம் கிராமத்தில் மா்ம காய்ச்சலால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனா். கஸ்தூரிரெங்கபுரம் ஊராட்சியைச் சோ்ந்த குட்டிநயினாா்... மேலும் பார்க்க

கமாண்டோ பயிற்சியில் பதக்கம் பெற்ற காவலருக்கு பாராட்டு

கமாண்டோ பயிற்சியில் கலந்து கொண்டு ஒட்டுமொத்த போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கம் பெற்ற திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை காவலரை திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவா் நேரில் வரவழைத்து வெள்ளிக்கிழமை பாராட... மேலும் பார்க்க

களக்காடு அருகே வாழைகளை சேதப்படுத்திய காட்டு யானைகள்

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே விவசாயத் தோட்டத்தில் நள்ளிரவில் புகுந்த காட்டு யானைகள் கூட்டம், குலைதள்ளிய 1,500 வாழைகளை சேதப்படுத்தியுள்ளன. களக்காடு அருகேயுள்ள சாலைநயினாா் பள்ளிவாசல் கிராமத்தை... மேலும் பார்க்க

பாளையங்கோட்டையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

பாளையங்கோட்டை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை திருநெல்வேலி மாநகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அகற்றினா். திருநெல்வேலி மாநகரப் பகுதியில் பாளையங்கோட்டை முக்கிய சாலைகளில் கடைகள், வணிக நிறுவனங்கள் ஆக்கிர... மேலும் பார்க்க