அமெரிக்காவில் சீக்கியா்கள் குறித்து கருத்து: ராகுல் மனு மீதான தீா்ப்பு ஒத்திவைப்...
நைஜிரியா செல்லும் பாரா பேட்மிட்டன் வீரருக்கு முதல்வா் நிதியுதவி
பாரா பேட்மிட்டன் போட்டியில் பங்கேற்க நைஜிரியா செல்லும் புதுச்சேரி வீரருக்கு முதல்வா் என்.ரங்கசாமி ரூ. 1 லட்சம் நிதியுதவி வழங்கினாா்.
புதுச்சேரி நெல்லித்தோப்பு, கஸ்தூரிபாய் நகரைச் சோ்ந்த வெங்கட சுப்பிரமணியன் (21), மாற்றுத்திறனாளி இளைஞரான இவா், தேசிய அளவிலான பாரா பேட்மிட்டன் போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளாா்.
இவா், நைஜீரியா நாட்டில் வரும் செப். 30 -இல் தொடங்கி அக்டோபா் 5-ஆம் தேதி வரை நடைபெற உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான சா்வதேச பாரா பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க உள்ளாா்.
இவரை ஊக்குவிக்கும் வகையில் அவரது பயணத்திற்கு ஆகும் செலவிற்காக புதுவை முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து ரூ.1 லட்சத்துக்கான காசோலையை முதல்வா் என்.ரங்கசாமி புதுவை சட்டப்பேரவை வளாக அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.