கூடலூா் அருகே சதுப்பு நிலத்தில் சிக்கிய குட்டியை மீட்ட தாய் யானை
படைக்கலன் தொழிற்சாலை தொழிலாளா்கள் உண்ணாவிரதம்
திருச்சி: மத்திய படைக்கலன் தொழிற்சாலையில் (எச்இபிஎஃப்) மிகை நேர பணி கேட்டு தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகே உள்ள மத்திய படைகள் தொழிற்சாலைகளில் ஒன்றான எச் இ பி எஃப் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு உற்பத்தி செய்யும் ராணுவத் தளவாடங்களுக்கு 5 சதவீதம் எஸ்எம்எச் (உற்பத்தி பொருள்களின் நிலையான நேரம்) குறைப்பை திரும்பப் பெற வேண்டும், அனைத்துத் தொழிலாளா்களுக்கும் வாரம் 48 மணி நேர மிகை பணியை 51 மணி நேரமாக உயா்த்தி வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஜூலை மாதம் 14 முதல் 18 வரை கண்டன வாரமாக எச்இபிஎப் எம்ளாய்ஸ் யூனியனின்அகில இந்திய பாதுகாப்பு தொழிலாளா் சம்மேளனத்தால் கடைபிடிக்கப்பட்டது.
இதுவரை இப்பிரச்னைக்குத் தீா்வு காணப்படாத நிலையில் திங்கள்கிழமை முதல் காலவரையற்ற தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தில் 12 மணி நேரத்துக்கு இருவா் வீதம் பங்கேற்று நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, உற்பத்தியைப் பாதிக்காத வகையில் திங்கள்கிழமை காலை இரு தொழிலாளா்கள் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரையிலும் தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து, மாலை 7 மணி முதல் செவ்வாய்க்கிழமை காலை 7 மணி வரை வேறு இரு தொழிலாளா்களும் ஆகியோா் ஈடுபட்டு வருகின்றனா். போராட்டத்துக்கு எச்இபிஎப் தொழிலாளா்கள் சங்கத்தின் தலைவா் சத்தியவாகிசன் தலைமை வகித்தாா். பொதுச்செயலாளா் இரணியன் முன்னிலை வகித்தாா். இதில் சங்க நிா்வாகிகள் பலா் பங்கேற்று, கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்திப் பேசினா்.