பிரதமரின் ஊரக குடியிருப்புத் திட்ட நிதியை அதிகரிக்க வேண்டும்: எம்.பி.க்கள் கோரிக...
பதுக்கி வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்கள் பறிமுதல்
ஆம்பூா் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த டாஸ்மாக் மதுபான பாட்டில்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
ஆம்பூா் அருகே சோலூா் கிராமத்தில் டாஸ்மாக் மதுபான பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வாணியம்பாடி வருவாய்க் கோட்டாட்சியா் அஜிதா பேகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், அவா் சோலூா் கிராமத்தில் உள்ள பிச்சைமுத்து என்பவரின் வீட்டில் நடத்திய சோதனையில் 75 மதுபான பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதைத் தொடா்ந்து அந்த மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்த அவா், அவற்றை ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்தாா்.
இந்த சோதனையின்போது வட்டாட்சியா் ரேவதி, வருவாய்த் துறை, காவல் துறையினா் உடனிருந்தனா்.