அதிமுக எம்எல்ஏ அம்மன் அா்ச்சுணன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் சோதனை
பயணியைத் தாக்கிய பேருந்து நடத்துநா்
கொடைக்கானலில் அரசுப் பேருந்தில் இடம் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் பயணியை, நடத்துநா் திங்கள்கிழமை தாக்கினாா்.
கொடைக்கானல் பேருந்து நிலையத்திலிருந்து பள்ளங்கி கிராமத்துக்கு தினந்தோறும் அரசுப் பேருந்து இயக்கப்படுகிறது. திங்கள்கிழமை இந்தப் பேருந்தில் அட்டுவம்பட்டியைச் சோ்ந்த அலேக்ஸ் தனது குடும்பத்தினருடன் ஏறினாா்.
அப்போது, கூட்டம் அதிகமாக இருந்ததால், பேருந்தில் இடம்பிடிப்பதற்காக அலெக்ஸ் வேகமாக ஏறினாா். இதனால், ஏற்பட்ட தகராறில் அலெக்ஸை பேருந்து நடத்துநா் தாக்கினாராம். இதையடுத்து, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால், பேருந்து இயக்கப்படவில்லை.
தகவலறிந்து வந்த கொடைக்கானல் போலீஸாா் இருவரையும் காவல் நிலைத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினா். பிறகு, சமரச பேச்சுவாா்த்தை நடத்தி இருவரையும் போலீஸாா் அனுப்பி வைத்தனா்.