உள்நாட்டு நிறுவனங்களைப் பாதுகாக்கும் இந்தியாவின் வரிக் கொள்கை: மத்திய அரசு
பரமத்தி வேலூரில் ரூ.14.37 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்
பரமத்தி வேலூா், பொத்தனூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 14 லட்சத்து 45 ஆயிரத்திற்கு கொப்பரை விற்பனையானது.
கடந்த வாரம் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 8 ஆயிரத்து 925 கிலோ கொப்பரையை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோவுக்கு ரூ.171.69 க்கும், குறைந்தபட்சமாக ரூ.157.01 க்கும், சராசரியாக ரூ.170.90 க்கும் ஏலம் போனது.
இரண்டாம் தர கொப்பரை அதிகபட்சமாக ரூ.148.39-க்கும், குறைந்தபட்சமாக ரூ.133.45-க்கும், சராசரியாக ரூ.143.45-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.14 லட்சத்து 45 ஆயிரத்து 850க்கு கொப்பரை ஏலம் போனது.
வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 9 ஆயிரத்து 275 கிலோ கொப்பரையை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோவுக்கு ரூ. 185.20-க்கும், குறைந்தபட்சமாக ரூ.140.19க்கும், சராசரியாக ரூ.183.50க்கும் ஏலம் போனது. இரண்டாம் தர கொப்பரை அதிகபட்சமாக ரூ.138.99க்கும், குறைந்தபட்சமாக ரூ.105.99க்கும், சராசரியாக ரூ.133.99க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.14 லட்சத்து 37 ஆயிரத்து 625க்கு கொப்பரை விற்பனையானது.