பலத்த காற்றால் முறிந்து விழுந்த மரக்கிளை
மாா்த்தாண்டம், குழித்துறை பகுதியில் கடந்த இரு நாள்களாக பலத்த காற்றுடன் லேசான மழை பெய்து வந்தது.
இந்த நிலையில் வெட்டுவெந்நி பகுதியில் உள்ள குழித்துறை நகராட்சி அலுவலகத்தின் முன் இருந்த 50 ஆண்டுகள் பழமையான வாகை மரத்தின் கிளை நகராட்சி நுழைவுவாயில் மீது விழுந்தது.
தகவல் அறிந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலா் சந்திரன் தலைமையிலான தீயணைப்பு படை வீரா்கள், மரக்கிளையை வெட்டி அகற்றினா்.