செய்திகள் :

பல ஆண்டுகள் உழைத்தும் மறுக்கப்பட்ட பதவி; அதே நிறுவனத்தை வாங்கி CEO ஆன பெண்; ஓர் அடடே ஸ்டோரி!

post image

நிறுவனத்தின் வளர்ச்சிக்காகப் பல ஆண்டுகள் உழைத்த பெண்ணிற்குத் தலைமைப் பொறுப்பு மறுக்கப்பட்ட பின், அதே நிறுவனத்தை வாங்கி தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளார் ஜூலியா ஸ்டீவர்ட் என்பவர்.

ஜூலியா ஸ்டீவர்ட் அமெரிக்காவைச் சேர்ந்த ஆப்பிள்பீஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்தபோது, நிறுவனத்தின் முன்னேற்றங்களுக்காகக் கடுமையாக உழைத்திருக்கிறார்.

இதற்காக புதிய குழுவை உருவாக்கி, நிறுவனத்தின் நிலையை மேம்படுத்தியிருக்கிறார். நிறுவனத்தின் பங்கு மதிப்பு இரட்டிப்பாகி, வளர்ச்சியடைந்துள்ளது. இதனால், தலைமை நிர்வாக அதிகாரி (CEO) பதவிக்குத் தான் தகுதியானவர் என அவர் நம்பியிருக்கிறார்.

Companies
Companies (Representational Image)

ஆனால், அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பதவிக்கு ”நீங்கள் இல்லை" என்று மறுக்கப்பட்டிருக்கிறது. இந்த மறுப்பு அவருக்கு அதிர்ச்சியாக இருந்துள்ளது.

இதற்காக அவர் உணர்ச்சிவசப்படாமல் பொறுமையாகச் செயலில் கவனம் செலுத்தி வந்துள்ளார். அதன் பின்னர் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்து, அதனால் நிறுவனத்தின் பங்கின் மதிப்பு பாதிக்கப்படாமல் இருப்பதையும் உறுதி செய்திருக்கிறார்.

இதனையடுத்து ஜூலியா ஐஹாப் (IHOP) நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பை ஏற்று, தொடர்ந்து தனது பணிகளில் கவனம் செலுத்தி வந்துள்ளார்.

இதற்கிடையில் ஆப்பிள்பீஸ் நிறுவனம் மீண்டும் அவரது கவனத்திற்கு வந்துள்ளது. ஆப்பிள்பீஸ் நிறுவனத்தை ஜூலியா கடன் வாங்கி வாங்கியிருக்கிறார்.

கையகப்படுத்தலுக்குப் பிறகு, ஆப்பிள்பீஸின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியைப் பணி நீக்கம் செய்துவிட்டு அவரே அதனை எடுத்து நடத்தி வந்துள்ளார்.

ஆப்பிள்பீஸ் நிறுவனம் தர மறுத்த தலைமைப் பதவியை அவரின் உழைப்பின் மூலம் மீண்டும் அடைந்திருக்கிறார்.

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

Passport: இணையவாசிகளிடையே கவனம் பெறும் நூற்றாண்டு பழைய பிரிட்டிஷ் இந்திய பாஸ்போர்ட்!

விமானத்தில் பயணிப்பதற்கு பாஸ்போர்ட் அவசியமான ஒன்றாக உள்ளது. முன்பெல்லாம் விமான போக்குவரத்து அரிதாக காணப்பட்ட நிலையில், தற்போது உள்நாடு, வெளிநாடு என பலரும் நேரத்தை மிச்சப்படுத்துவதற்காக விமானத்தில் பயண... மேலும் பார்க்க

பூனைக்காக மினியேச்சர் நகரத்தை கட்டினாரா சீன யூடியூபர்? - வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

வீட்டில் இருக்கும் செல்லப்பிராணிகளுக்கு அதன் உரிமையாளர்கள் பல்வேறு வசதிகளை செய்து கொடுக்கின்றனர். இன்னும் சொல்லபோனால் குழந்தைகளைப் போன்று அதனை பராமரித்து வருகின்றனர். அந்த வகையில் சீன யூடிபர் ஒருவர் ப... மேலும் பார்க்க

பேத்தியின் 23 வயது வகுப்பு தோழனை விரும்பும் 83 வயது மூதாட்டி - இரு குடும்பமும் ஆதரவு என நெகிழ்ச்சி!

23 வயதான இளைஞரை 83 வயதான மூதாட்டி ஒருவர் விரும்புவதாக தெரிவித்துள்ள சம்பவம், பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. கடந்த ஆறு மாதங்களாக டேட்டிங் செய்து வரும் இவர்களின் காதல் கதை எங்கிருந்து தொடங்கியது என்ப... மேலும் பார்க்க

”எப்போதும் போல தான் இரை வைத்தேன்; ஆனால் இந்த முறை...”- நீல நிறத்தில் முட்டை இட்ட கோழி; பின்னணி என்ன?

கர்நாடகாவின் தாவணகெரே மாவட்டம் சன்னகிரி தாலுகாவில் உள்ள நெல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சையத் நூர் என்பவருக்குச் சொந்தமான கோழி நீல நிறத்தில் முட்டையிடுவதாக கூறும் புகைப்படம் இணையத்தில் வைரலாகப் பரவி வருக... மேலும் பார்க்க

சீனா: "என் கணவருடன் 5 வருடங்களாகத் தூங்கியதற்கு நன்றி" - தோழிக்கு பேனர் வைத்த மனைவி; பின்னணி என்ன?

”கணவருடன் ஐந்து வருடங்களாகத் தூங்கியதற்கு நன்றி” என்று எழுதப்பட்ட பதாகைகளைத் தொங்கவிட்டு சீனாவைச் சேர்ந்த ஒரு பெண் கவனம் பெற்றுவருகிறார்.சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள ஹாங்ஷானைச் சேர்ந்த ஒரு பெண் தன... மேலும் பார்க்க

கழிவறை பிரச்னையால் பாட்டில்களில் சிறுநீர் கழித்த பயணிகள்; பறக்கும் விமானத்தில் என்ன நடந்தது?

விர்ஜின் ஆஸ்திரேலியா என்ற விமானத்தில் பயணிகள் சிறுநீரைக் கழிக்க பாட்டில்கள் பயன்படுத்தப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.பாலியில் உள்ள டென்பசார் நகரிலிருந்து ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகருக்கு... மேலும் பார்க்க