செய்திகள் :

`பல கோடி ரூபாய் முறைகேடு' - மதுரை மத்திய சிறையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை

post image

மதுரை மத்திய சிறையில் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துவரும் நிலையில், பல கோடி ரூபாய் மோசடிப்புகாரில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மத்திய சிறையில், கடந்த 2016 முதல் 2021 -ம் ஆண்டுவரை சிறைக் கைதிகள் மூலம் பொருள்கள் தயாரிக்கவும், அதற்கான மூலப்பொருள்களை வாங்கியதிலும், விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த வருவாயிலும் பல கோடி ரூபாய் மோசடி நடந்ததாக புகார் எழுந்தது.

இதுகுறித்து ஏற்கெனவே வழக்கறிஞர் புகழேந்தி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்த நிலையில், அதைத் தொடர்ந்து அப்போதைய சிறைத்துறை டி.ஜி.பி-யால் மதுரை மத்திய சிறையில் பணியாற்றிய 9 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். மேலும், இந்த மோசடிப் புகார் தொடர்பாக, மத்திய கணக்கு தணிக்கைத்துறை அதிகாரிகள் மதுரை மத்திய சிறையில் உள்ள ஆவணங்களையும், மூலப்பொருள்களை கொள்முதல் செய்யப்பட்ட நிறுவனங்களில் விற்பனை செய்யப்பட ரசீதுகளையும் ஆய்வு செய்ததில் ரூ 1.51 கோடி மோசடி நடந்துள்ளது தெரிய வந்தது.

மதுரை மத்திய சிறை

இதுமட்டுமின்றி தமிழகத்தில் உள்ள 3 மத்திய சிறைகளிலும் சிறைவாசிகள் தயாரித்த பொருள்களை விற்பனை செய்ததில் 14.5 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்ததாக  தணிக்கைத்துறை தெரிவித்துள்ளது. ஊழல் தடுப்பு இயக்குநரகம் விசாரணை நடத்தி முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.

இதனை தொடர்ந்து, மதுரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி அதன் அடிப்படையில் முறைகேடு நடைபெற்ற காலத்தில் மதுரை சிறையில் எஸ்.பி-யாக பணியாற்றிய ஊர்மிளா (தற்போது கடலூர் மத்திய சிறை எஸ்.பி) சிறை அதிகாரி வசந்தகண்ணன் (தற்போது பாளையங்கோட்டை சிறை ஏ.டி.எஸ்.பி) தியாகராஜன் (தற்போது வேலூர் சிறை நிர்வாக அதிகாரி) உள்பட மதுரையைச் சேர்ந்த ஜாபருல்லாகான்,  முகமது அன்சாரி, முகமது அலி, சென்னையைச் சேர்ந்த சீனிவாசன், சாந்தி, வெங்கடேஷ்வரி, நெல்லையைச் சேர்ந்த சங்கரசுப்பு, தனலட்சுமி உள்ளிட்ட 11 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ்  வழக்குப்பதிவு செய்தனர்.

 இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மதுரை மத்திய சிறையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். அங்கிருந்த ஆவணங்களை ஆய்வு செய்து சிறை அதிகாரிகள் சிலரிடம் விசாரணை நடத்தியுள்ளார்கள். இந்த சோதனை மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை: டூவீலர் சர்வீஸ்; பணம் கேட்ட மெக்கானிக்கை தாக்கிய எஸ்.ஐ! - வீடியோ வெளியானதால் சஸ்பெண்ட்!

டூ வீலரை சர்வீஸ் செய்ததற்கு பணம் கேட்ட மெக்கானிக்கை எஸ்.ஐ தாக்கிய வீடியோ வெளியான நிலையில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் மதுரை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட... மேலும் பார்க்க

சென்னை: தொழிலதிபரை நம்பவைத்து ரூ.10 லட்சம் மோசடி; `சென்ட்டிமென்ட்' சங்கர் சிக்கியது எப்படி?

திருச்சி மாவட்டம், இளங்காகுறிச்சி, பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் முகமது நசுருதீன் (43). இவர் கட்டட பொருள்கள் சப்ளை மற்றும் பெயின்டிங் வேலை செய்து வருகிறார். இவருக்கு தொழில் முறையில் சுதன் என்பவர் மூல... மேலும் பார்க்க

இலங்கை: கிலோ கணக்கில் தொடர்ந்து சிக்கும் தங்கம்; `பாக் நீரிணை’ பகுதியும் தங்கம் கடத்தலும்

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே கடல் வழியாக போதை பொருட்களான கஞ்சா, போதை மாத்திரைகள், வலிநிவாரணி மாத்திரைகள், பீடி பண்டல்கள், தங்க கட்டிகள் ஆகியன கள்ளத்தனமாக கடத்தி செல்வது வாடிக்கையாகி வருகிறது. இந... மேலும் பார்க்க

கோவை: கரூர் கம்பெனி Vs டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் - வெடிக்கும் பஞ்சாயத்து

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 2023ம் ஆண்டு சிறைக்கு செல்வதற்கு முன்பு டாஸ்மாக் துறையில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. பார் உரிமையாளர்களிடம் கறார் வசூல், டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங... மேலும் பார்க்க

ISKCON: ஆரம்பத்தில் சின்ன சின்னதாய்; இப்போது லட்சக்கணக்கில் - கோயில் பணத்துடன் ஓட்டம் பிடித்த ஊழியர்

ஆக்ராவில் லட்சக்கணக்கில் கோயில் பணத்தை ஏமாற்றிவிட்டு தலைமறைவாகி உள்ளார் இஸ்கான் ஊழியர் ஒருவர். ஆக்ரா பிருந்தாவனத்தில் உள்ள இஸ்கான் அமைப்பில் 2019-ம் ஆண்டு சேர்ந்துள்ளார் முரளிதர் தாஸ் என்பவர். இந்த சம... மேலும் பார்க்க

`மனைவிக்கு பாடம் கற்பிக்கிறேன்' - பெற்றோர் வீட்டுக்குச் சென்று திரும்பி வராததால் கணவர் விபரீத முடிவு

குஜராத்தில், மனைவிக்குப் பாடம் கற்பிக்க வேண்டும் என்று கணவன் தூக்குபோட்டுத் தற்கொலைசெய்து கொண்ட சம்பவம் அவர் செல்போன் வீடியோ மூலம் தற்போது வெளியில் தெரியவந்திருக்கிறது. போலீஸாரின் கூற்றுப்படி, பொடாட் ... மேலும் பார்க்க