உச்சநீதிமன்ற நீதிபதி கே.வினோத் சந்திரன்- கொலீஜியம் பரிந்துரை
பள்ளிக்கூட வாசலில் மாணவன் கத்தியால் குத்திக் கொலை!
தில்லியில் பள்ளிக்கூடத்தின் வாசலில் 14 வயது மாணவன் ஒருவன் சக மாணவர்களினால் கத்தியால் குத்திக் கொலைச் செய்யப்பட்டுள்ளார்.
கிழக்கு தில்லியின் ஷாகர்ப்பூர் பகுதியிலுள்ள பள்ளிக்கூடத்தில் பயிலும் இஷு குப்தா (வயது 14) எனும் மாணவன் ஒருவனுக்கும் அங்குள்ள மற்ற மாணவர்களுக்கும் நேற்று (ஜன.3) வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், பள்ளிக்கூடத்தின் வாசலில் இஷு குப்தாவை மற்ற மாணவர்கள் அடித்து தாக்கியுள்ளனர். அப்போது அந்த மாணவர்களில் ஒருவன் அவரது வலது தொடையில் கத்தியால் குத்தியுள்ளான். இதில் இஷு குப்தா பரிதாபமாக பலியானான்.
இதையும் படிக்க: கேள்வி கேட்ட பத்திரிகையாளர் சடலமாக மீட்பு!
தகவல் அறிந்து அங்கு வந்த ஷாகர்ப்பூர் காவல் துறையினர் மற்றும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் பலியான சிறுவனின் உடலை உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்ததுடன், இந்த கொலையில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் கைது செய்தனர்.
இந்த கொலையில் ஈடுப்பட்ட 7 பேர் கைது செய்து செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.