செய்திகள் :

பள்ளிக் கட்டடங்கள் மீது அலட்சியமா? - அண்ணாமலை கேள்வி

post image

தமிழகத்தில் அனைத்து பள்ளிக் கட்டடங்களையும் தர உறுதிப் பரிசோதனைக்கு உள்ளாக்க வேண்டும் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

ஈரோடு கோபிசெட்டிபாளையம் அருகே கூகலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக் கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது பற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

"கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ரூ. 64.33 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு முதலமைச்சர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்ட ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கூகலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக் கட்டடத்தின் மேற்கூரை நேற்று இடிந்து விழுந்திருக்கிறது.

நேற்று விடுமுறை தினமானதால், வகுப்பறையில் மாணவர்களோ, ஆசிரியர்களோ இல்லாமல், அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டிருக்கிறது.

தமிழகம் முழுவதுமே, அரசுப் பள்ளிக் கட்டிடங்களின் மேற்கூரை இடிந்து விழுவது, தினசரி செய்தி ஆகியிருக்கிறது. பள்ளிக் குழந்தைகளுக்கான கட்டிடங்கள் கட்டுவதில் கூட, திமுக அரசு இத்தனை அலட்சியமாகச் செயல்படுவதைச் சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஏழை, எளிய குடும்பப் பின்னணியில் இருந்து, அரசுப் பள்ளிகளில் பயில வரும் குழந்தைகள் உயிர், திமுக அரசுக்கு அத்தனை இளக்காரமாகப் போய்விட்டதா? கடந்த நான்கு ஆண்டுகளில், திமுக அரசு எந்தெந்த மாவட்டங்களில் புதிய பள்ளிக் கட்டிடங்கள் கட்டியுள்ளன என்று ஏற்கனவே கேள்வி எழுப்பியிருந்தோம். அதற்கு, ஒவ்வொரு தொகுதி சட்டமன்ற உறுப்பினருக்கும் கடிதம் எழுதி நாடகமாடியதோடு நிறுத்திக் கொண்டார் உதயநிதி ரசிகர் மன்றத் தலைவரான பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்.

விளம்பர ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், இதுவரை இடிந்து விழுந்த பள்ளிக் கட்டிடங்கள் கட்டிய ஒப்பந்ததாரர்கள் யார், அவர்கள் மீது திமுக அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்பதைப் பொதுமக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்.

மேலும், கடந்த நான்கு ஆண்டுகளில் திமுக அரசு கட்டிய கட்டிடங்கள் அனைத்தையுமே, தர உறுதிப் பரிசோதனைக்கு உள்ளாக்குவது, அனைத்துத் தரப்பு மக்களுக்குமே நல்லது" என்று பதிவிட்டுள்ளார்.

Former TN BJP leader Annamalai has urged that all school buildings in Tamil Nadu should be subjected to quality assurance testing.

ஜூலை 26-இல் பிரதமர் தமிழகம் வருகை

பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 26-ஆம் தேதி தமிழகம் வருகிறார். தூத்துக்குடியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பல்வேறு திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு ... மேலும் பார்க்க

குரூப் 4 விடைத்தாள்கள் பாதுகாப்பில் குளறுபடி இல்லை: டிஎன்பிஎஸ்சி விளக்கம்

குரூப் 4 விடைத்தாள்கள் பாதுகாப்பாக உள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தோ்வாணையத்தின் தோ்வு கட்டுப்பாட்டு அலுவலா் அ.சண்முகசுந்தரம் செவ்வாய்க்கி... மேலும் பார்க்க

ராஜேந்திர சோழன் பிறந்த தினம்: அரியலூரில் ரூ.19 கோடியில் ஏரி - சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மாமன்னா் ராஜேந்திர சோழன் பிறந்த தினமாகக் கருதப்படும் ஆடி திருவாதிரையையொட்டி, அரியலூா் மாவட்டத்தில் உள்ள ஏரி மற்றும் சுற்றுலா தலங்கள் ரூ.19.25 கோடியில் மேம்படுத்தப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அற... மேலும் பார்க்க

ஆசிரியா்களுக்கான மனமொத்த மாறுதல்: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கான மனமொத்த மாறுதல் கலந்தாய்வு ஆகஸ்ட் மாதம் நடத்தப்படவுள்ள நிலையில் அதற்கான விண்ணப்பப் பதிவு செவ்வாய்க்கிழமை (ஜூலை 22) தொடங்கியது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் அ... மேலும் பார்க்க

ஜூலை 25 முதல் அன்புமணி சுற்றுப்பயணம்

‘தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்’ என்ற பெயரில் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸின் சுற்றுப்பயணம் ஜூலை 25-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதுகுறித்து பாமக தலைமை நிலையம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்க... மேலும் பார்க்க

கால்நடை மருத்துவ படிப்புகள்: இன்று 7.5 % ஒதுக்கீடு கலந்தாய்வு

கால்நடை மருத்துவ படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீடு கலந்தாய்வு புதன்கிழமை நடைபெறுகிறது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வ... மேலும் பார்க்க