பாகிஸ்தானில் தொடர்ந்து நிலநடுக்கம்! அணு ஆயுத சோதனையா?
பாகிஸ்தானில் நேற்று 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அதற்கு முந்தைய இரு நாள்களில் 5.7 ரிக்டர் அளவிலும், 4.0 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கங்கள் பதிவான நிலையில், மூன்றாவது நாளாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் நிலநடுக்கங்கள், அணு ஆயுத சோதனையாக இருக்கலாம் என எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் சிலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
எனினும், துறை சார்ந்த அதிகாரிகளோ அல்லது நிபுணர்களோ இது குறித்து எந்தவிதக் கருத்தையும் இதுவரை தெரிவிக்கவில்லை.
பாகிஸ்தானில் மே 10ஆம் தேதி அதிகாலை 5.7 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டது. இதற்கு மறுநாளே 4.0 என்ற ரிக்டர் அளவில் மற்றொரு நில நடுக்கம் பதிவானது.
இந்த இரு நில அதிர்வுகளிலும் உயிர்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
இதனிடையே நேற்று பிற்பகல் பாகிஸ்தானில் 4.6 ரிக்டர் அளவில் மற்றொரு நில நடுக்கம் பதிவானது. இந்த நில நடுக்கம் பூமியிலிருந்து 10 கி.மீ. தொலைவில் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்படுவதாக வரும் செய்திகளுக்குப் பின்னால், அணு ஆயுத சோதனை இருக்கலாம் என சமூக வலைதளப் பக்கங்களில் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
இந்தியாவுக்கு எதிரான போரில் அணு ஆயுத மிரட்டல்களை பாகிஸ்தான் விடுத்து வந்த நிலையில், அங்கு ஏற்பட்டுவரும் நிலநடுக்கங்கள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
எனினும், துறை சார்ந்த நிபுணர்களோ வல்லுநர்களோ இது குறித்து இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | முப்படைகள் மூலம் பாகிஸ்தானுக்கு உரிய பாடம்: மோடி