செய்திகள் :

பாகிஸ்தானுக்கு உதவும் சீனா; இந்தியா தயாரிக்கும் Stealth Fighter Jet - சிறப்பம்சம் என்ன?

post image

ஸ்டெல்த் ஃபைட்டர் ஜெட்டுகளை சீனா பாகிஸ்தானிற்கு கூடிய விரைவில் டெலிவரி செய்ய உள்ளது. இந்த நிலையில், இந்திய தனது சொந்த தயாரிப்பிலேயே ஸ்டெல்த் (Stealth Fighter Jet) ஃபைட்டர் ஜெட்டுகளை உருவாக்க உள்ளது. இதற்கு இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.

ஸ்டெல்த் ஃபைட்டர் ஜெட் என்றால் என்ன?

இது ராணுவ சம்பந்தப்பட்ட போர் விமானம் ஆகும். இந்த விமானத்தை ரேடார் உள்ளிட்ட எந்தக் கருவிகளாலும் கண்டுபிடிக்க முடியாது.

ஸ்டெல்த் என்றால் ஆங்கிலத்தில் 'திருட்டுத்தனம்' என்று பொருள்படும். ஆக, இது பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ரேடர் கண்கள், மனித கண்கள் ஆகியவற்றில் இருந்து எளிதாக தப்பும், இது சத்தம் கூட எழுப்பாது. அதனால், இந்த ஜெட்டை எதிரிகள் கண்டுபிடிப்பது மிக மிக கடினம்.

ஸ்டெல்த் ஃபைட்டர் ஜெட் | Stealth Fighter Jet
ஸ்டெல்த் ஃபைட்டர் ஜெட் | Stealth Fighter Jet

இந்தியாவில் உருவாக்கப்பட உள்ள இந்த ஃபைட்டர் ஜெட்டுகளின் சிறப்பம்சம் என்ன?

இது இந்தியாவின் முதல் ஸ்டெல்த் விமானமாக அமையும். இரு இன்ஜீன்களை கொண்டு இயங்க உள்ள இந்த ஃபைட்டர் ஜெட், இந்தியாவின் ஐந்தாவது தலைமுறை ராணுவ விமானமாக இருக்கும். இதை வானூர்தி மேம்பாட்டு நிறுவனம் (ADA) உருவாக்கும்.

இந்த ஜெட்டின் மாடலை உருவாக்க கூடிய விரைவில், இந்த நிறுவனம் அரசாங்க மற்றும் தனியார் பாதுகாப்பு நிறுவனங்களிடம் டெண்டர் விடப்படும். இதில் இந்திய நிறுவனங்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும்.

ஏன் தனியார் நிறுவனங்கள்?

இது இந்தியாவின் டாப் பாதுகாப்புத் துறை கமிட்டியின் பரிந்துரை ஆகும். இந்தியாவின் முக்கிய ஃபைட்டர் ஜெட் தயாரிப்பு நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) ஏற்கெனவே பணிச்சுமையால் தடுமாறி கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், அதன் பணிச்சுமையை குறைக்கவும், தனியார் நிறுவனங்களின் வருகையை பாதுகாப்புத் துறையில் ஊக்கவிக்கவும் தான் இந்த ஏற்பாடு.

காஷ்மிர் | இந்தியா பாகிஸ்தான் எல்லை

திடீரென ஏன்?

இப்போது தான் இந்தியா - பாகிஸ்தான் இடையே தாக்குதல் முடிந்துள்ளது. ஆனால், அது மீண்டும் எழாதா என்பது மில்லியன் டாலர் கேள்வி. சீனாவிற்கும், இந்தியாவிற்கும் மோதல் போக்கு வருவதும், போவதுமாக உள்ளது.

சீனா வேக வேகமாக தனது ராணுவ பலத்தைக் கூட்டிகொண்டே போகிறது. கூடவே தனது ஆரூயிர் நண்பனான பாகிஸ்தானுக்கும் ராணுவ தளவாடங்களை விற்று வருகிறது. சீனா வழங்கிய ஸ்டெல்த் ஃபைட்டர் ஜெட் ஏற்கனவே பாகிஸ்தானிடம் உள்ளது.

இதனால், இந்தியா அதன் பலத்தை மேலும் உயர்த்த வேண்டியதாக உள்ளது. அந்த நடவடிக்கைகளில் ஒரு பகுதி தான் இந்த 'ஸ்டீல்த் ஃபைட்டர் ஜெட்'.

பேருந்து ஓட்டுநர்களுக்கு ஹார்ட் அட்டாக்; முதலுதவி தெரியாத நடத்துனர்கள், தமிழக அரசு கவனத்திற்கு..!

சமீப காலங்களாகவ பேருந்து ஓட்டுனருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு, பேருந்துகள் விபத்திற்குள்ளாகும் காட்சிகளையும், பேருந்தை இயக்கிய ஓட்டுநர்‌ மரணிக்கும் காட்சிகளையும் நாம் தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருக்க... மேலும் பார்க்க

``ஜம்மு & காஷ்மீரின் சுற்றுலா, வளர்ச்சி முக்கியமானது.." - பஹல்காமில் உமர் அப்துல்லா பேசியதென்ன?

'பஹல்காம்' என்ற வார்த்தையை அவ்வளவாகக் கேட்டிராத இந்தியா மற்றும் உலக நாடுகள், கடந்த மாதம் ஏப்ரல் 22-ம் தேதிக்குப் பிறகு, அந்தப் பெயரை அடிக்கடி உச்சரித்து வருகின்றன. ஆம்... பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலி... மேலும் பார்க்க

Golden Dome: ``61 பில்லியன் டாலர் தர வேண்டாம்'' - ட்ரம்ப் அழைப்பு; அமெரிக்கா உடன் இணையுமா கனடா?

'கோல்டன் டோம்' - அமெரிக்காவை பாதுகாக்க 175 பில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்படும் புதிய ராணுவக் கட்டமைப்பு இது. இதற்கான ஒப்புதலை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வழங்கியுள்ளார். இந்த கோல்டன் டோம் கப்பல் ஏவுகண... மேலும் பார்க்க

Doctor Vikatan: சருமத்தில் கருந் திட்டுகள், க்ரீம்கள் போட்டு பலனில்லை.. உணவுப்பழக்கம் உதவுமா?

Doctor Vikatan: எனக்கு கடந்த சில மாதங்களாக சருமத்தில்ஆங்காங்கே கருந்திட்டுகள் தெரிகின்றன. என்னென்னவோ க்ரீம்கள் உபயோகித்தும் பலனில்லை. சருமத்தில் காணப்படும் கருமையான திட்டுகள், நிற மாற்றங்களைப் போக்க உ... மேலும் பார்க்க

``ஆந்திரா இன்று என்ன யோசிக்கிறதோ, அதை நாளை இந்தியா யோசிக்கும்!'' - சந்திரபாபு நாயுடு பேச்சு

ஆந்திரா மாநிலத்தை ஆளும் கட்சியான தெலுங்கு தேசத்தின் மூன்று நாள் மாநாடு நேற்று கடப்பாவில் தொடங்கியது. அப்போது பேசிய ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு...ரூபாய் நோட்டுகள் வேண்டாம்! "இப்போது நம்மிடம் ... மேலும் பார்க்க

`Putin Playing with Fire' ட்ரம்ப் பதிவுக்கு ரஷ்யாவின் பதிலடி.. `மூன்றாம் உலகப் போர்' எச்சரிக்கையா?

'என்னுடைய நண்பர் தான்... நான் பேசுகிறேன்', 'போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைக்கு உதவுகிறேன்', 'நான் இல்லாமல் புதின் எப்படி வருவார்?' என்று தன் நண்பரான ரஷ்ய அதிபர் புதினை விட்டுக்கொடுக்காமல் பேசி வந்தார் ... மேலும் பார்க்க