செய்திகள் :

பாகிஸ்தான் பெருவெள்ளம்: படகில் சென்ற பத்திரிகையாளரின் நேரலை வைரல்!

post image

கடந்த ஜூன் மாத இறுதியிலிருந்து பாகிஸ்தானில் ஏற்பட்ட கனமழை மற்றும் திடீர் வெள்ளம் காரணமாக சுமார் 739 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2,400-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.

செப்டம்பர் மாதம் வரை கடுமையான வானிலை தொடரும் என்று வானிலை ஆய்வு மையங்கள் எச்சரித்துள்ளன. வடமேற்கு மாகாணமான கைபர் பக்துன்க்வாவில், ஒன்பது மாவட்டங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பாகிஸ்தானின் இந்த மழை வெள்ளம் குறித்து செய்தி சேகரிப்பில் ஈடுப்பட்டிருந்த பத்திரிகையாளர் மெஹ்ருன்னிசாவின் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகின்றது.

இந்த வீடியோவை, 2008-ல் கராச்சியைச் சேர்ந்த பத்திரிகையாளர் சந்த் நவாப் ரயில் நிலையத்தில் தனது அறிக்கையை பதிவு செய்ய முயற்சித்தபோது ஏற்பட்ட சிரமங்களைப் போலவே இருப்பதாக, மக்களால் ஒப்பிடப்பட்டு வருகிறது.

வைரலாகும் வீடியோவின் படி, வெள்ள நீரில் படகில் இருந்து செய்திகளை நேரடி ஒளிப்பரப்பு செய்த மெஹ்ருன்னிசா தனது தொனியை விட்டுவிட்டு, தனது பயத்தை வெளிப்படுத்தத் தொடங்கினார். இரண்டு தனித்தனி வீடியோக்களில் படகு ஆடும்போது அவர் பயத்தில் கத்துவதைக் காணலாம்.

“எனது இதயம் கீழே போகிறது. நண்பர்களே, எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள். நான் மிகவும் அசௌகரியமாகவும் பயமாகவும் உணர்கிறேன்” என்று கூறியிருக்கிறார். இந்த வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. களத்திற்கு சென்று இவ்வாறு செய்தி சேகரிப்பில் ஈடுபடும் பெண்ணின் துணிச்சலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Driver Amma: துபாயில் ரோல்ஸ் ராய்ஸ் கார் ஓட்டி அசத்தும் 72 வயது கேரளப் பெண்மணி; யார் இந்த மணியம்மா?

72 வயது இந்தியப் பெண்மணி ஒருவர் துபாயில் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரை ஓட்டும் வீடியோ இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. வைரலாகும் வீடியோவின் படி, கேரளா சேலை அணிந்து சொகுசு காரை ஓட்டுகிறார் அந்தப் பெண்மணி.... மேலும் பார்க்க

பீகார்: பாம்பு கடித்த பெண்ணை மீண்டும் பாம்பு அருகே படுக்க வைக்கும் கிராமவாசிகள்; பின்னணி என்ன?

பீகாரின் சீதாமர்ஹி மாவட்டத்தில் பாம்பு கடித்ததாகக் கூறப்படும் ஒரு பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் மீண்டும் பாம்பை அருகில் வைத்து அந்தப் பெண்ணைப் படுக்க வைத்திருக்கும் காட்சி இணையத்தில் வைரல... மேலும் பார்க்க

Orange Shark: ஆழ் கடலின் வண்ண அதிசயம்... விஞ்ஞானிகளுக்கே வியப்பூட்டிய ஆரஞ்சு சுறா!

கடலின் ஆழங்களில் மறைந்து இருக்கும் ரகசியங்கள் சில நேரங்களில் நம்மை மூச்சுத்திணறச் செய்யும் அளவுக்கு ஆச்சர்யப்படுத்தும். “சுறா என்றாலே பயம்!” – அப்படித்தான் பலர் நினைப்பார்கள். ஆனால், இந்த முறை ஒரு சுற... மேலும் பார்க்க

காதலியிடமிருந்து வந்த கடிதம்; 500 புஷ்அப்ஸ் செய்து பெற்ற ராணுவ அதிகாரி - `ஓர்' அடடே சம்பவம்!

தற்போது சமூக ஊடகங்களில் காதலை பகிர வீடியோக்கள், எமோஜிகள் எல்லாம் இருந்தாலும் கையெழுத்துக் கடிதங்கள் கொண்டிருந்த பாசம் மனதை வருடும். அதற்குச் சான்றாக, முன்னாள் இந்திய இராணுவ அதிகாரி கேப்டன் தர்மவீர் சி... மேலும் பார்க்க

எக்ஸாம் ரிசல்ட் பெற ‘ஆடுடன்’ வந்த டீனேஜ் மாணவி- என்ன காரணம் தெரியுமா?

இங்கிலாந்தின் லாங்காஷையரில் வசிக்கும் 16 வயது மாணவி மில்லி ஜான்சன், தனது பொதுத் தேர்வு முடிவுகளைப் பெறும்போது தனது ஆட்டையும் உடன் அழைத்து சென்ற வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.மற்ற மாணவர்கள் பெற்... மேலும் பார்க்க

விருந்தினர்களின் தனிமையை போக்கும் நாய் சேவை – சீன ஹோட்டலின் பின்னணி என்ன?

சீனாவின் வுஹான் நகரில் உள்ள கன்ட்ரி கார்டன் பீனிக்ஸ் என்ற ஹோட்டல் நாய்களை விரும்புவோருக்கென புதுமையான சேவையை வழங்கி வருகிறது. இந்த ஹோட்டலுக்கு வரும் விருந்தினர்கள் சுமார் ₹4,700 (385.39 யுவான்) செலவில... மேலும் பார்க்க