செய்திகள் :

``பாஜகவோடு கூட்டணி கிடையாது என்று விஜய் சொன்னதை வரவேற்கிறேன்'' - செல்வப்பெருந்தகை

post image

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப் பெருந்தகை எம்எல்ஏ தூத்துக்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தூத்துக்குடி கட்சியினருக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "பாஜக தொடர்ந்து தமிழக மக்களையும் தமிழக நலனையும் புறக்கணிக்கிறது. நடிகர் விஜய், பாசிச பாஜகவோடு கூட்டணி கிடையாது என்று சொல்லியிருப்பது வரவேற்கத்தக்கது.

கட்சி நிகழ்ச்சியில் செல்வப்பெருந்தகை

கால் பதிக்க இடம் கிடைக்காதா என பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் துடித்து கொண்டு இருக்கிறார்கள். யாரும் அதற்கு  வழி  ஏற்படுத்திவிடக் கூடாது. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை எத்தனை தொகுதிகள் கூட்டணி போன்ற விஷயங்களை அகில இந்திய தலைமைதான் முடிவு செய்யும். தமிழகத்தில் வேறு கட்சிகள் கூட்டணிக்குள் வருவதாக இருந்தால் தமிழகத்தில் எங்களது கூட்டணிக்கு தலைமை வகிகக்கூடிய தமிழக முதலமைச்சர் முடிவு செய்வார்.

தமிழக அரசு, தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் 90 சதவீதத்திற்கும் அதிகமாக நிறைவேற்றியுள்ளது. தமிழக மக்களுக்கு எது தேவையோ அதை இந்த அரசு செய்து வருகிறது. தேர்தலில் கொடுத்த வாக்குறுதியில் நிறைவேற்றாமல் உள்ள 10% வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

செல்வப்பெருந்தகை

அ.தி.மு.க., கஜானாவை காலி செய்த போதும், அதனை திறமையாக தமிழக அரசு கையாண்டு வருகிறது. தமிழகத்தில் கோவில் சொத்துகள் ரூ.4,000 கோடி சொத்துகளை மீட்டு எடுத்துள்ளனர். 3 ஆயிரம் கோயில்களில் குடமுழுக்கு நடத்தியுள்ளனர். திமுக அரசின் மீது குறை செல்வதற்கு ஒன்றும் இல்லை. மக்களின் நலனுக்காக வாழ்விற்காக தமிழக முதலமைச்சர் 24 மணி நேரம் செயல்பட்டு வருகிறார்.” என்றார்.

``அமித் ஷா கூறிய பிறகு வேறு யார் பேசினாலும் அது சரியல்ல'' - முதலமைச்சர் வேட்பாளர் குறித்து இபிஎஸ்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு கால இடைவெளிகூட இல்லாததால், ஆளுங்கட்சியான தி.மு.க-வும், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க-வும் தேர்தல் வேலையை மும்முரமாகத் தொடங்கிவிட்டன.இப்போதைக்கு தி.ம... மேலும் பார்க்க

``அரசுப் பணிகளில் திமுக ஐ.டி விங் நபர்களைச் சேர்க்க முதல்வர் ஸ்டாலின் முயற்சி'' - இபிஎஸ் கண்டனம்

உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணியிடங்களுக்கு தி.மு.க ஐ.டி விங் சேர்ந்தவர்களை நியமிக்க முதல்வர் ஸ்டாலின் முயற்சிப்பதாக குற்றம்சாட்டியிருக்கும் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இதற்கு கண்டனம்... மேலும் பார்க்க

Bihar: ``மகளிருக்கு இலவசமாக வழங்கிய சானிட்டரி பேடில் ராகுல் காந்தி படம்'' -காங்கிரஸை விமர்சித்த பாஜக

பீகாரில் வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இத்தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. வாக்காளர் பட்டியல் திருத்தியமைக்கப்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்ச... மேலும் பார்க்க

Taliban: தாலிபான் அரசை அங்கீகரித்த முதல் நாடு ரஷ்யா! - காரணம் தெரியுமா?

ஆஃப்கானிஸ்தானில் 2021-ம் ஆண்டு தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியது. அப்போதிலிருந்து இதுவரை எந்த நாடும் தாலிபான் நிர்வாகத்தை முறையாக அங்கீகரிக்கவில்லை. ஆனாலும், தாலிபான் அரசு பல நாடுகளுடன் உயர்மட்டப் பே... மேலும் பார்க்க

Foods for Pancreas: பூண்டு முதல் திராட்சை வரை.. கணையம் காக்கும் உணவுகள்!

கணையம், நம் உடலில் உள்ள பெரிய சுரப்பி இதுதான். சுமார் 6-10 இன்ச் அளவில் இருக்கும். முக்கிய ஹார்மோன்களையும் என்ஸைம்களையும் சுரக்கச் செய்து, செரிமானத்துக்கு உதவுகிறது. மீன் போன்ற வடிவில், பஞ்சு போல மென்... மேலும் பார்க்க

TVK: ``பொதுமன்னிப்புக் கேட்டு பதவி விலகுங்கள் முதல்வரே!'' - ஆதவ் அர்ஜூனா காட்டம்!

'செயற்குழுக் கூட்டம்!"தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழுக் கூட்டம் பனையூரில் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடந்து முடிந்திருக்கிறது. இக்கூட்டத்தில் அக்கட்சியின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்ச... மேலும் பார்க்க