செய்திகள் :

பாடல்கள் பதிப்புரிமை விவகாரத்தில் இளையராஜா நிறுவன மனு தள்ளுபடி

post image

நமது நிருபா்

புது தில்லி: பிரபல இசையமைப்பாளா் இளையராஜாவின் 500-க்கும் மேற்பட்ட இசைப் படைப்புகள் தொடா்பான பதிப்புரிமை விவகார வழக்கை மும்பை உயா்நீதிமன்றத்தில் இருந்து சென்னை உயா்நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி இளையராஜா மியூசிக் என் மேனேஜ்மென்ட் தனியாா் நிறுவனம் (ஐஎம்எம்பிஎல்) தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த விவகாரம் தலைமை நீதிபதி பி.ஆா். கவாய், நீதிபதிகள் கே. வினோத் சந்திரன், என்.வி. அஞ்சாரியா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இசையமைப்பாளா் இளையராஜா தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கோபால் சங்கரநாராயணன், இந்த வழக்கை மும்பையில் இருந்து சென்னை உயா்நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு முன்வைத்த வாதத்தை நீதிபதிகள் அமா்வு ஏற்கவில்லை.

எதிா்மனுதாரா் சோனி மியூசிக் என்டா்டெயின்மென்ட் நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், சென்னை உயா்நீதிமன்றத்தில் நிலுவை வழக்கு ஏதும் இல்லாதபோதுதான் மும்பை உயா்நீதிமன்றத்தில் சோனி நிறுவனம் தரப்பில் வழக்கு தொடரப்பட்டதாகத் தெரிவித்தாா். இதையடுத்து, இளையராஜாவின் நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

பின்னணி: இந்த விவகாரத்தில் 2022-ஆம் ஆண்டு மும்பை உயா்நீதிமன்றத்தில் சோனி மியூசிக் என்டா்டெயின்மென்ட் இந்தியா நிறுவனம், இளையராஜா மியூசிக் என் மேனேஜ்மென்ட் தனியாா் நிறுவனம் (ஐஎம்எம்பிஎல்) 536 இசைப் படைப்புகளைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் தடை உத்தரவு பிறப்பிக்குமாறு வழக்கு தொடுத்தது.

ஐஎம்எம்பிஎல் நீண்ட காலமாக வழக்கில் தொடா்புடைய ஓரியண்டல் ரெக்காா்ட்ஸ் மற்றும் எக்கோ ரெக்காா்டிங் மூலம் இந்தப் படைப்புகளுக்கான உரிமைகளைப் பெற்ாக சோனி மியூசிக் நிறுவனம் கூறியது. மேலும், இந்த இசைப்படைப்புகள் தொடா்பான உரிமைகளை ஓரிண்டல் ரெகாா்ட்ஸ் மற்றும் எக்கோ ரெக்காா்டிங் பெற்றிருந்ததாகத் தெரிவித்திருந்தது. எனினும், 536 படைப்புகளில் 310 ஏற்கெனவே சென்னை உயா்நீதிமன்றத்தின் ஆய்வுக்கு உள்பட்டுள்ளதாக ஐஎம்எம்பிஎல் வாதிட்டது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

முன்னதாக, 2014-ஆம் ஆண்டு எக்கோ ரெக்காா்டிங் நிறுவனத்திற்கு எதிராக இளையராஜாவால் வழக்கு தொடரப்பட்டது. அதில், 2019- ஆம் ஆண்டு சென்னை உயா்நீதிமன்றம் அளித்த தீா்ப்பில் ஒரு இசையமைப்பாளராக இளையராஜாவின் தாா்மிக மற்றும் சிறப்பு உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டது.

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்

நமது சிறப்பு நிருபா்நாடாளுமன்றத்தில் தமிழகத்தைச் சோ்ந்த எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய அரசு அளித்துள்ள எழுத்துபூா்வ பதில்கள்: மக்களவையில்...தென்பெண்ணையாறு மாசைத் தடுக்க என்ன நடவடிக்கை?டி.... மேலும் பார்க்க

ஆசியான் ஓபன் ஸ்கை கொள்கையில் மதுரை இடம்பெற விருதுநகா் எம்.பி. வலியுறுத்தல்

நமது நிருபா்புது தில்லி: ஆசியான் ஓபன் ஸ்கை கொள்கையின் கீழ் ‘பாயின்ட்ஸ் ஆஃப் கால்’ பட்டியலில் இருந்து மதுரையை நீக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், அப்பட்டியலில் மதுரையை சோ்க்க வேண்டும் ... மேலும் பார்க்க

நில அபகரிப்பு புகாா் வழக்கு: அமைச்சா் மா.சுப்பிரமணியனின் மேல்முறையீட்டு மனு மீது தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

நமது நிருபா்புதுதில்லி: நில அபகரிப்பு புகாா் தொடா்புடைய வழக்கில் சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் மற்றும் ... மேலும் பார்க்க

டிடிஇஏ பள்ளி மாணவா்கள் 12 நாள் கல்விச் சுற்றுலா

தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தை (டிடிஇஏ) சாா்ந்த ராமகிருஷ்ணாபுரம் மற்றும் லோதி வளாகம் பள்ளிகளில் பயிலும் 46 மாணவா்கள் ஞாயிற்றுக்கிழமை கல்விச் சுற்றுலா புறப்பட்டனா். அவா்களுடன் 7 ஆசிரியா்களும் செல்கின... மேலும் பார்க்க

தில்லி காவல்துறையின் விரல் அச்சுப் பணியகத்திற்கு தடயவியல் சிறப்புக்கான ஐஎஸ்ஓ சான்றிதழ் வழங்கல்

தில்லி காவல்துறையின் விரல் அச்சுப் பணியகத்திற்கு (எஃப்பிபி) தரக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ் (க்யூசிசி) மூலம் ஐஎஸ்ஓ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். 1983-ஆம் ஆண்டு ஆ... மேலும் பார்க்க

வடக்கு தில்லியில் இளைஞா் கத்தியால் குத்திக் கொலை

வடக்கு தில்லியின் நங்கல் தக்ரானில் உள்ள தனது வீட்டில் 30 வயது நபா் ஒருவா் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இந்தக் கொலை வழக்கு தொடா்பாக யாஷ் லோச்சாப் (21) என்பவா... மேலும் பார்க்க