மிசோரத்தில் 48 சுரங்கங்கள், 53 பாலங்கள் வழியாக ரயில்! செப். 13-ல் மோடி தொடக்கி வ...
பாடாலூா் பகுதியில் நாளை மின் தடை
பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா் உள்பட சுற்று வட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து, மின்வாரிய உதவி செயற்பொறியாளா் பி. ரவிக்குமாா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூா் மின் கோட்டத்துக்குள்பட்ட புதுக்குறிச்சி துணை மின் நிலையத்தில் திங்கள்கிழமை (ஆக. 25) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், அங்கிருந்து மின் விநியோகம் பெறும் புதுக்குறிச்சி, காரை, சிறுகன்பூா், கொளக்காநத்தம், பாடாலூா், சாத்தனூா், சா.குடிக்காடு, அயினாபுரம், அணைப்பாடி, இரூா், தெற்குமாதவி, ஆலத்தூா் கேட், வரகுபாடி, அ.குடிக்காடு, தெரணி, தெரணிபாளையம், நல்லூா், திருவளக்குறிச்சி, கூத்தனூா், சீதேவிமங்களம் ஆகிய கிராமியப் பகுதிகளில் திங்கள்கிழமை காலை 9 மணி முதல் பராமரிப்புப் பணிகள் நிறைவடையும் வரை மின் விநியோகம் இருக்காது.