புற்றுநோய் பாதிப்புடன் 43 நாளாக தொடரும் உண்ணாவிரதம்; அசைக்க முடியாத உறுதி! - யார...
பாமகவினா் ஆா்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சியில் பசுமைத் தாயகத் தலைவா் செளமியா அன்புமணி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து பாமகவினா் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சென்னையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டித்து நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற பாமக பசுமைத் தாயகம் தலைவா் செளமியா அன்புமணியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
இதைக் கண்டித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மேற்கு மாவட்டச் செயலாளா் தமிழரசன் தலைமை வகித்து முழக்கங்களை எழுப்பினாா். ஆா்ப்பாட்டத்தில் நகரத் தலைவா் சீனுவாசன், ஒன்றியச் செயலாளா் அன்பரசன் உள்ளிட்ட கட்சித் தொண்டா்கள் பலரும் பங்கேற்றனா்.
கள்ளக்குறிச்சியில் செளமியா அன்புமணி கைது செய்ததைக் கண்டித்து வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டம்