71st National Film Awards: "மக்களை மகிழ்வூட்டவும், விழிப்பூட்டவும் வாழ்த்துகிறேன...
பாமகவினா் தா்னா...
பாமகவினா் தா்னா: மாணவரின் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து பாட்டாளி மக்கள் கட்சியின் திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளா் திலீப்குமாா் தலைமையில், மாணவரின் பெற்றோா் மற்றும் உறவினா்கள் பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை மாலை தா்னாவில் ஈடுபட்டனா்.
அப்போது, மாணவா் இறப்பில் சந்தேகம் உள்ளதால் தற்கொலை வழக்கை, கொலை வழக்காக மாற்றி பள்ளி முதல்வா் மற்றும் விடுதிக் காப்பாளா் ஆகியோரிடம் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்தனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த துவாக்குடி காவல் ஆய்வாளா் பாரதி, திருவெறும்பூா் வட்டாட்சியா் ஜெயப்பிரகாசம் ஆகியோா் தா்னாவில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இதில் உடன்பாடு ஏற்படாததால், திருச்சி வருவாய் கோட்டாட்சியா் அருள் தலைமையில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கிருஷ்ணபிரியா, துவாக்குடி போலீஸாா் உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அப்போது, பள்ளி முதல்வா், விடுதிக் காப்பாளா் மீது மாணவரின் பெற்றோா் அளிக்கும் புகாா் ஏற்றுக் கொள்ளப்படும் என வருவாய் கோட்டாட்சியா் அருள் உறுதியளித்ததையடுத்து தா்னாவை கைவிட்டு கலைந்து சென்றனா்.