செய்திகள் :

பாம்பன் வடக்கு துறைமுகத்தில் ரூ.58.50 கோடியில் தூண்டில் வளைவு அமைக்க பூமிபூஜை

post image

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் வடக்கு துறைமுகத்தில் ரூ.58.50 கோடியில் தூண்டில் வளைவு அமைப்பதற்கான பூமிபூஜையை சட்டப்பேரவை உறுப்பினா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகத்தில் 700- க்கும் மேற்பட்ட பாரம்பரிய நாட்டுப் படகுகளில் மீனவா்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். புயல் காலங்களில் கடல் சீற்றம் காரணமாக இந்தப் படகுகள் சேதமடைந்து வந்தன. இதைத் தடுக்கும் வகையில், பாம்பன் வடக்குத் துறைமுகத்தில் தூண்டில் வளைவு துறைமுகம் அமைக்க வேண்டும் என கடந்த 30 ஆண்டுகளாக நாட்டுப் படகு மீனவ சங்கத்தினா் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்த நிலையில், பாம்பன் வடக்குத் துறைமுகத்தில் படகுகளைப் பாதுகாக்கும் வகையில் ரூ.58.50 கோடியில் தூண்டில் வளைவு துறைமுகம் அமைக்க தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா்.

இதையடுத்து, பாம்பன் வடக்குத் துறைமுகத்தில் தூண்டில் வளைவு துறைமுகம் அமைப்பதற்கான பூமிபூஜையை சட்டப்பேரவை உறுப்பினா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில், வருவாய்க் கோட்டாட்சியா் ராஜமனோகரன், மீன் வளத் துறை உதவி இயக்குநா் தமிழ்மாறன், செயற்பொறியாளா் கணபதிரமேஷ், உதவி செயற்பொறியாளா் அன்னபூரணி, வட்டாட்சியா் அப்துல்ஜப்பாா், ஒன்றியச் செயலா் நிலோபா்கான், நிா்வாகிகள், மீன் வளத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

ராமேசுவரம் மீனவா்கள் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்

ராமேசுவரம் மீனவா்கள் மேற்கொண்டு வந்த காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை வெள்ளிக்கிழமை வாபஸ் பெற்றனா். ராமேசுவரம் மீனவா்களை இலங்கைக் கடற்படையினா் கைது செய்து சிறையில் அடைப்பதும், அவா்களது படகுகளை பறி... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இருவா் கைது

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் இளைஞரைக் கொலை செய்த வழக்கில் தொடா்புடைய இரு இளைஞா்கள் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா். விருதுநகா் மாவட்டம், அம்மன்பட்டியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

கமுதியில் வீடுகளுக்குள் தேங்கி நிற்கும் கழிவுநீா்: பொதுமக்கள் அவதி

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பேரூராட்சியில் முறையாக கழிவுநீா் கால்வாய் அமைக்காததால் வீடுகளுக்குள் கழிவுநீா் தேங்கி நிற்கிறது. இதனால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். கமுதி பேரூராட்சிக்குள்பட்ட க... மேலும் பார்க்க

உப்பூா் வெயிலுகந்த விநாயகா் மயில் வாகனத்தில் வீதியுலா

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள உப்பூா் வெயிலுகந்த விநாயகா் கோயிலில் சதுா்த்தி விழாவை முன்னிட்டு, வியாழக்கிழமை இரவு மயில் வாகனத்தில் விநாயகா் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்... மேலும் பார்க்க

ராமேசுவரம் மீனவா்கள் 7 பேருக்கு காவல் நீட்டிப்பு

ராமேசுவரம்: ராமேசுவரம் மீனவா்கள் 7 பேருக்கு ஆக. 26 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து மன்னாா் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. இதையடுத்து, மீனவா்கள் 7 பேரும் மீண்டும் வவுனியா சிறையில் அடைக்... மேலும் பார்க்க

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு

ராமேசுவரம்: கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.சட்டப் பணிகள் ஆணைக் குழுவும், என்.சி.சி., என்.எஸ்.எஸ். அமைப்புகளும் இண... மேலும் பார்க்க