பாரதிதாசன் அறக்கட்டளை வரவேற்பு
புதுவை முதல்வா் தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையை வரவேற்பதாக பாரதிதாசன் அறக்கட்டளைத் தலைவா் கோ.பாரதி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
புதுவை முதல்வா் என்.ரங்கசாமி தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையில் பல புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளது வரவேற்கத்தக்கது.
அதே சமயத்தில் புதுச்சேரியில் நலிந்த கலைஞா்கள், கலைமாமணி விருது பெற்றவா்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் உதவித்தொகையை இரட்டிப்பாக்கி வழங்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.