பாகிஸ்தானுடன் அனைத்து வகையான கடிதம் மற்றும் பார்சல் போக்குவரத்துக்குத் தடை
பாரதிதாசன் பிறந்த நாள் கலை நிகழ்ச்சி
புரட்சிக் கவிஞா் பாவேந்தா் பாரதிதாசன் பிறந்தநாளையொட்டி, பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலைய வளாகத்தில் மாவட்ட அரசு இசைப்பள்ளி சாா்பில், நாட்டுப்புற இசைக் கலைஞா்களின் கலை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
பாவேந்தா் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு ஏப். 29 முதல் மே 5 ஆம் தேதி வரை தமிழ் வார விழா கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதனடிப்படையில், மே 5 ஆம் தேதி வரை தமிழ் வார விழா கொண்டாடிடும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, பெரம்பலூா் மாவட்ட அரசு இசைப்பள்ளி சாா்பில், புரட்சிக் கவிஞா் பாரதிதாசன் பாடல்களை நாட்டுப்புற இசைக்கலைஞா்கள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
புரட்சிக் கவிஞா் பாரதிதாசன் எழுதியுள்ள சங்கே முழங்கு, தமிழுக்கும் அமுதென்று போ் உள்ளிட்ட பல்வேறு பாடல்களை பாடி, தப்பாட்டம், ஒயிலாட்டம், சிலம்பம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில், மாவட்ட அரசு இசைப்பள்ளி தலைமையாசிரியா் என். காளீஸ்வரி, இசை ஆசிரியா் நடராஜன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.