மூவர் சதம் விளாசல்: ஜிம்பாப்வேவுக்கு எதிராக வலுவான நிலையில் இங்கிலாந்து!
பாலக்கோட்டில் எருதுவிடும் விழா
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே ஸ்ரீ அக்குமாரியம்மன் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு எருது விடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
சோமன அள்ளி கிராமத்தில் ஸ்ரீ அக்குமாரியம்மன் சித்திரைத் திருவிழாவின் 7-ஆவது நாளான எருதுவிடும் நிகழ்ச்சியில், ஊருக்கு ஒரு காளை வீதம் 12 காளைகள் கலந்துகொண்டன. முன்னதாக கிராம மக்கள் மேள, தாளங்களுடன் கோ பூஜை செய்து புனித நீரை காளைகளின் மேல் தெளித்து ஒவ்வொன்றாக அவிழ்த்துவிட்டனா்.
இந்தக் காளைகளை இளைஞா்கள் அடக்க முயன்றனா். விழாவில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டனா். பாலக்கோடு நகரப் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.