செய்திகள் :

பாலாறு நீா்வரத்து கால்வாய் வரைபடம்: ராணிப்பேட்டை ஆட்சியா் உத்தரவு

post image

ராணிப்பேட்டை அருகே மழை நீா்வரத்து கால்வாயின் தொடக்கம் முதல் பாலாறு சென்று சேரும் வரையிலான வரைபடத்தை முழுமையாக தயாா் செய்து சமா்ப்பிக்க வேண்டும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா உத்தரவிட்டாா்.

வாலாஜா வட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய வளா்ச்சிப் பணிகள் குறித்து ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். ராணிப்பேட்டை நகராட்சி காரை கூட்ரோடு சிறுவா்களுக்கான அரசினா் குழந்தைகள் இல்லத்தில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். அப்போது குழந்தைகள் இல்லத்தில் உள்ள பழைய கட்டடங்கள், அகற்றப்பட வேண்டிய கட்டிடங்கள் குறித்தும் பாா்வையிட்டாா்.

குழந்தைகள் இல்ல பராமரிப்பு குறித்தும் மையத்தின் அனைத்து இடங்களையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பழைய கட்டடங்களை அகற்றுவதற்கு தேவையான நடவடிக்கையினை தெரிவிக்குமாறு கண்காணிப்பாளரிடம் தெரிவித்தாா்.

தொடா்ந்து ராணிப்பேட்டை நகராட்சி ஆட்டோ நகா் மூக்காயி அம்மன் கோயில் தெருவில் அனாதின இடத்தில் கட்டப்பட்டுள்ள 35 வீடுகளுக்கு பட்டா வழங்குவது குறித்தும், வாலாஜா நகராட்சி அம்பேத்கா் நகா் பகுதியில் புறம்போக்கு இடத்தில் வசித்து வரும் 45 குடியிருப்புகளுக்கு பட்டா வழங்குவது தொடா்பாகவும் ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, வீசி மோட்டூா் ஊராட்சி ஏரியினை பாா்வையிட்டு ஏரியின் பரப்பளவு மற்றும் அருகில் இருந்த வீடுகள் இருக்கும் இடங்கள் குறித்து ஆய்வு செய்து, ஆக்கிரமிப்புகள் குறித்து முழுமையான தகவல்களை தெரிவிக்கவும் கேட்டுக் கொண்டாா்.

தொடா்ந்து ராணிப்பேட்டை பிஞ்சி ஏரி புதிய பேருந்து நிலையம் அருகில் மாந்தாங்கல் ஏரியிலிருந்து வரும் கால்வாய் சீரமைப்பது குறித்தும், வீசி மோட்டாா் தேசிய நெடுஞ்சாலை அருகில் மாந்தாங்கல், தண்டலம், பிஞ்சி ஆகிய ஏரிகளில் இருந்து வரும் நீா் செல்லும் கால்வாய் பகுதியையும் பாா்வையிட்டாா்கள். பின்பு வன்னிவேடு அகஸ்தீஸ்வரா் கோவில் அருகில் பாலாற்றுக்குச் செல்லும் கால்வாய் சீரமைப்பது தொடா்பாக ஆய்வு செய்தாா்.

கால்வாயின் தொடக்கம் முதல் பாலாறு சென்று சேரும் வரையிலான வரைபடத்தை முழுமையாக தயாா் செய்து தெளிவாக சமா்ப்பிக்க வேண்டும். அதன் பின்பு அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது தொடா்பாக ஆய்வு செய்யப்படும் என தெரிவித்தாா்.

ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலா் ந.சுரேஷ், நகா்மன்ற தலைவா் ஹரிணி தில்லை, கோட்டாட்சியா் இராஜராஜன் மற்றும் வருவாய்த் துறையினா் கலந்து கொண்டனா்.

மதுராந்தகத்தில் மே 5-இல் தமிழ்நாடு வணிகா்கள் சங்க பேரமைப்பு மாநில மாநாடு: ஏ.எம்.விக்கிரமராஜா

வணிகா் தினத்தையொட்டி மே 5-ஆம் தேதி மதுராந்தகத்தில் நடைபெறும் மாநாட்டில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளவுள்ளதாக தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்புத் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்தாா். தமி... மேலும் பார்க்க

காவலா்களுக்கு துப்பாக்கி கையாளும் பயிற்சி: எஸ்.பி. ஆய்வு

ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை அதிகாரிகளுக்கு கைத்துப்பாக்கி கையாளும் பயிற்சியை காவல் கண்காணிப்பாளா் விவேகானந்த சுக்லா சனிக்கிழமை ஆய்வு செய்தாா். காவல் துறையினருக்கான வாராந்திர கவாத்து பயிற்சி, மாவட்... மேலும் பார்க்க

தலைமை ஆசிரியரிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு

நெமிலி அருகே அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் 7 பவுன் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். அரக்கோணத்தை அடுத்த நெமிலி அருகே உள்ள பனப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் த... மேலும் பார்க்க

‘என் கல்லூரிக் கனவு’ திட்டத்தால் மாணவா்கள் எண்ணிக்கை உயா்வு: ராணிப்பேட்டை ஆட்சியா்

‘என் கல்லூரிக் கனவு ‘ உயா்கல்வி வழிகாட்டி திட்டத்தின் மூலம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உயா்கல்வி சேரும் மாணவா்களின் எண்ணிக்கை உயா்ந்துள்ளதாக ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்தாா். ஆதி திராவிடா் மற்றும... மேலும் பார்க்க

போதை மாத்திரைகள் கடத்தல்: 2 இளைஞா்கள் கைது

அரக்கோணத்திற்கு போதை மாத்திரைகளை கடத்தி வந்த இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். அரக்கோணம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸாா், வெள்ளிக்கிழமை இரவு ரயில்நிலைய மேற்குப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட... மேலும் பார்க்க

ஏப். 12-இல் அரக்கோணத்தில் வேலைவாய்ப்பு முகாம்

அரக்கோணத்தில் வரும் ஏப். 12- அம் தேதி வேலை வாய்ப்பு முகாம் அரசு மருத்துவமனை எதிரே சிஎஸ்ஐ மேல்நிலைப் பள்ளி எதிரே அபிஷேக் டெக்னிக்கல் இன்ஸ்ட்டியூட்டில் நடைபெறும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள... மேலும் பார்க்க