பசிபிக் கடலின் மிக ஆழத்தில் 4 கருப்பு முட்டைகள்.. உள்ளே இருந்த அதிசயம்!
பாளை. அருகே ரயில் முன் பாய்ந்து முதியவா் தற்கொலை
பாளையங்கோட்டை அருகே ரயில் முன் பாய்ந்து முதியவா் தற்கொலை செய்து கொண்டாா். அவா் யாா் என்பது குறித்து சந்திப்பு ரயில்வே போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
திருச்செந்தூா்- திருநெல்வேலி பயணிகள் ரயில் செவ்வாய்க்கிழமை இரவு பாளையங்கோட்டை மகாராஜநகா் பகுதியில் வந்துகொண்டிருந்தபோது, தண்டவாளத்தின் அருகே நின்றிருந்த முதியவா் திடீரென ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாராம்.
இதைப் பாா்த்த லோகோ பைலட், திருநெல்வேலி சந்திப்பு ரயில்வே போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளாா். சம்பவ இடத்துக்கு வந்த ரயில்வே காவல் உதவி ஆய்வாளா் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா், அந்த முதியவரின் சடலத்தை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப்பதிவு செய்து இறந்த நபா் யாா்? என்பது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.