பிரபல ஹாலிவுட் நடிகர் மைக்கல் மேட்சன் காலமானார்!
ஹாலிவுட்டில் பிரபலமான நடிகர் மைக்கல் மேட்சன் காலமானார்.
ஹாலிவுட்டில் சினிமா, தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் மைக்கல் மேட்சன். அகைன்ஸ்ட் ஆல் ஹோப் (against all hope) படம் மூலம் அறிமுகமானவர் தொடர்ந்து பல படங்களில் நடித்தார்.
முக்கியமாக, இயக்குநர் குயிண்டன் டாரண்டினோ இயக்கிய ரிசர்வையர் டாக்ஸ், கில்பில், தி ஹேட்புல் எய்ட், ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து அசத்தினார்.
இறுதியாக, லெஜெண்ட் ஆஃப் ஒயிட் டிராகன் படத்தில் நடித்திருந்தார். குணச்சித்திர நடிகராக, வில்லனாக கிட்டத்தட்ட 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், அமெரிக்காவிலுள்ள கலிஃபூர்ணியா மாகாணத்தில் மைக்கல் மேட்மன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவரது மறைவுக்கு ஹாலிவுட் பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றன.
இதையும் படிக்க: தனுஷுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே?
hollywood actor michael madsen died in cardic arrest