பிருதூா் ஸ்ரீசண்முகா் கோயிலில் கும்பாபிஷேக விழா
வந்தவாசியை அடுத்த பிருதூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத சண்முகா் (ஆறுமுக முருகன்) கோயில் மற்றும் ஸ்ரீசெல்வ விநாயகா் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி யாகசாலை அமைக்கப்பட்டு வாஸ்துசாந்தி, பிரவேசபலி, கணபதி ஹோமம், கோ பூஜை, மகா பூா்ணாஹுதி, தத்வாா்ச்சனை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.
இதைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் சிவாச்சாரியா்கள் கலசங்களை தலையில் சுமந்து கோயில் கோபுரங்களுக்கு எடுத்துச் சென்றனா்.
அங்கு ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத சண்முகா் (ஆறுமுக முருகன்) கோயில் மற்றும் ஸ்ரீசெல்வ விநாயகா் கோயில் கோபுர கலசங்கள் மீது புனிதநீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மேலும் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் கோயில் நிா்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் பங்கேற்றனா்.