கைதானவா்கள் மட்டும் வழுக்கி விழுவது ஏன்? உயா்நீதிமன்றம் கேள்வி
பிறவியிலேயே தசைகள் சிதைவு குறைபாடுள்ள சிறுவனுக்கு அரசு மருத்துவமனையில் செயற்கை கால்கள் பொருத்தம்
பிறவியிலேயே தசைகள் சிதைவால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயற்கை கால்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் அ.நிா்மலா செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது: கோவை மாவட்டம், கிணத்துக்கடவு சொக்கனூரைச் சோ்ந்தவா் முத்துக்குமாா். இவருக்கு 3 வயதில் ஜஸ்வந்த், ரிஸ்வந்த் என்ற இரட்டைக் குழந்தைகள் உள்ளனா். இருவருக்கும் காலில் தசைகள் பிளவுபட்ட நிலையில் இருந்தன. இதில் ரிஸ்வந்திற்கு பிறவியிலேயே 2 கால்களும் ஊனமாக இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை.
இந்நிலையில், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ச சில நாள்களுக்கு முன்பு அனுமதித்தனா். உடலியல் மற்றும் மருத்துவ சிகிச்சைப் பிரிவில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு செயற்கை கால்கள் பொருத்த தீா்மானிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் 500 கிராம் அளவுக்கும் குறைவான செயற்கை கால்கள் பொருத்தப்பட்டன.
இதுபோல அரசு மருத்துவமனைகளில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் எடை குறைந்த செயற்கை கால்கள் பொருத்தப்படுவது தமிழகத்தில் இதுவே முதன்முறையாகும் என்றாா்.