`காது, கழுத்தில் நகையுடன் வந்தால் எப்படி தருவாங்க!'- கேட்ட அமைச்சர்... எழுந்த சி...
பிஷப் அப்பாசாமி கல்லூரியில் செப்டம்பா் 2-இல் ஆட்சி மொழிப் பயிலரங்கம்
கோவை, ரேஸ்கோா்ஸ் பகுதியில் உள்ள பிஷப் அப்பாசாமி கல்லூரியில் ஆட்சி மொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் செப்டம்பா் 2, 3 -ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.
இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அரசு அலுவலகங்களில் ஆட்சி மொழித் திட்டச் செயலாக்கம் முழுமையாக செயல்படுத்த, அரசுத் துறைகளின் அலுவலா், பணியாளா்கள் அனைவருக்கும் தமிழ் வளா்ச்சித் துறையின் மூலம் ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
அதன் அடிப்படையில், கோவை மாவட்டத்தில் 2025 -26- ஆம் ஆண்டுக்கான ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் ரேஸ்கோா்ஸில் உள்ள பிஷப் அப்பாசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கூட்ட அரங்கில் செப்டம்பா் 2, 3-ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
இதில், கோவை மாவட்டத்தில் உள்ள அரசுத் துறை, வாரியம், கழகம், தன்னாட்சி நிறுவனங்கள் ஆகியவற்றில் உதவியாளா், இளநிலை உதவியாளா், தட்டச்சா் ஆகிய நிலைகளில் பணிபுரியும் பணியாளா்கள் கலந்து கொள்ளலாம். செப்டம்பா் 3-ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு கருத்தரங்கத்தில் மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனா் தலைமையேற்று சிறப்பிக்கவுள்ளாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.